இடுப்பில் கட்டி வளர்ந்த சிறுமிக்கு உதவிய அதிரை சேர்மன் அஸ்லம்!

12043126_416774605186840_2678585988515059758_n
முத்துப்பேட்டை அருகே இடுப்பில் வளர்ந்த 5 கிலோ கட்டியால் மரணத்துடன் போராடும் ஏழை மாணவிக்கு அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர் அஸ்லாம் நிதி உதவி. பலரும் உதவி செய்ய முன் வருகின்றனர்.

முத்துப்பேட்டை செப் – 18

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு ஏரிக்கரை சாலையில் வசிப்பவர்கள் நல்லதம்பி – லலிதா தம்பதி. இருவரும் கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு சரன்யா, ரம்யா என்ற 2 மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் ரம்யா(20). கடந்த வருடம் முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் 4-ம் வகுப்பு படிக்கும் போது இடுப்பின் பின்பகுதியில் கட்டி ஒன்று உருவானது. உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அருவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டது. தொடர்ந்து ரம்யா படித்து வந்தார்.

இந்த நிலையில் 9-ம் வகுப்பு படித்து வந்த போது இடுப்பின் அதே பின்பகுதியில் மேலும் ஒரு கட்டி உருவானது. இதனையும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இடையில் சில வருடங்கள் ரம்யா பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்தார். கடந்த ஆண்டு 10-ம் வகுப்பை துவங்கிய நேரத்தில் இடுப்பின் பின் பகுதியில் மீண்டும் கட்டி வளர்ந்தது. இந்த கட்டி நாளுக்கு நாள் வளர்ந்து பெரியதாகிக் கொண்டே வந்ததால் நடப்பதற்கும், உட்கார்வதற்கும், தூங்குவதற்கும் ரம்யா மிகவும் சிரமமம்பட்டு வந்தார். இதனையடுத்து அவரது பெற்றோர் மீண்டும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். கட்டியை பரிசோதித்த டாக்டர், 5 கிலோ மேல் எடைக் கொண்ட கட்டியாக இருப்பதால் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று கூறிவிட்டனர்.

இதனால் பெற்றோர்கள் ரம்யாவை ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு கட்டியை ஆப்ரேஷன் செய்து அகற்ற ரூபாய் 2 லட்சம் வரை செலவாகும் என்று கூறியுள்ளார். கூலி வேலை செய்யும் தங்களிடம் அந்த அளவிற்கு பணம் இல்லாததால் அவரது பெற்றோர் ரம்யாவை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர். இதற்கிடையில் மாணவி ரம்யாவின் இடுப்பு பகுதியில் உருவானக்கட்டி 5 கிலோவிற்கு மேல் வளர்ந்துக் கொண்டே செல்வதால் அவரின் உடல் நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. இதனால் மாணவியின் கை, கால்கள் மற்றும் உடலும் மெழிந்து ஆபத்தான நிலையில் உள்ளார். மேலும் அவர் இயற்கை உபாதைகளை கழிக்க கூட சிரமப்பட்டு வருகிறார். சாப்பிட முடியாமலும் சிரமமம் பட்டு வருகிறார். இதனால் உயிருக்கு போராடி வரும் மாணவி ரம்யாவை அவரது தாய் லலிதாதான் வேலைக்கு செல்லாமல் உடன் இருந்து கவனித்து வருகிறார்.

இந்த மாணவிக்கு தமிழக அரசு மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்று கடந்த 16.09.2015 அன்று தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் செய்தி எதிரொலியாக தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்து மாணவி ரம்யாவுக்கு உதவிச் செய்ய தயாராகி வருகின்றனர். பலரும் தினகரனை தொடர்புக் கொண்டு உதவி செய்ய விரும்புவதாகவும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அதற்காக மாணவியின் பெற்றோர் இன்று தனியார் வங்கியில் கணக்கு தொடங்க உள்ளனர். இந்த நிலையில் தினகரனில் வெளிவந்த செய்தியைக் கண்டு துபாய்; எவர் கோல்டு உரிமையாளர் தொழிலதிபர் பழஞ்சூர் செல்வம் என்பவர் முதல்கட்டமாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கினார்.

அவரின் சார்பாக அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர் அஸ்லாம் நேற்று மாணவி ரம்யா வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் வழங்கினார். மேலும் பேரூராட்சி தலைவர் அஸ்லாம் பல்வேறு உதவிகளை செய்வதாக உறுதி அளித்தார். இந்த நிலையில் மாணவிக்கு உதவி செய்ய பல்வேறு நபர்கள் தொடர்ந்து தொடர்புக் கொண்டே வருவதால் அவர்களின் வசதிக்காக விரைவில் மாணவி ரம்யாவின் பெற்றோர் வங்கி கணக்கு எண் விரைவில் தெரிவிக்கப்படும்

படம் செய்தி:
1. முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தில் உள்ள மாணவி ரம்யா வீட்டிற்கு சென்று தொழிலதிபர் பழஞ்சூர் செல்வம் சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர் அஸ்லாம் நிதி உதவி வழங்கினார். அருகில் அதிரை சேகன நிஜாம், கீழக்காடு வல்லரசு ஆகியோர்
2. மாணவி ரம்யாவின் பரிதாப நிலை

12003906_416774465186854_2915745988412053338_n

செய்தி மற்றும் படங்கள்: நிருபர் முஹைதீன் பிச்சை

Close