ஹாஜிகளுக்கான மிக முக்கியமான தகவல்கள்

image

ஹஜ் செய்ய போகும் ஹாஜிகளுக்கு …
ஹஜ் செய்வதன் விரிவான முழுவிளக்கம் ஆரம்பம் முதல் இறுதி வரை
==================
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )
தாங்கள் படிப்பதோடு பலரும் பயன் பெரும் வகையில் share செய்யவும்
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான் …
“ எவர்கள் அங்கு யாத்திரை செய்ய சக்தி உடையவராக இருக்கிறார்களோ , அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக அங்கு சென்று அவ்வீட்டை ஹஜ் செய்வது கடைமையாகும் (சூரா ஆல இம்ரான் :97 )
நபிகள்நாயகம் (ஸல் ) அவர்கள் சொன்னார்கள் “ ஹஜ்ஜியின் காலகட்டத்தில் “ யார் பெண்களிடத்தில் உடல்உறவு செய்யாமலும் ,பாவமான காரியங்களில் ஈடு படாமலும் ,இந்த வீட்டை இறைவன் பொருந்திக்கொள்ளும் விதத்தில் ஹஜ் செய்கிறார்களோ அவர்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு அன்று பிறந்த பாலகன் போல் ஆகிவிடுகிறார் ( புஹாரி )
ஹஜ்ஜின் கடமைகள் நான்கு
===============================
1 – இஹ்ராம் அணிந்து கொள்வது,அத்தோடு ஹஜ் வணக்கத்தில் நுழைவதற்கு நிய்யத் செய்துகொள்வது.
2 – அரபாவில் தங்குவது.
3 – தவாஃபுல் இஃபாழா (பெருநாளில் செய்யும் தவாஃப் செய்வது )
4 – ஸஃபா மர்வாக்கு இடையே தொங்கோட்டம் ஓடுவது.
இக்கடமைகளில் ஏதேனும் ஒன்றை செய்யாமல் விட்டு விட்டால் அதை அவர் மீண்டும் செய்யும்வரை அவரது ஹஜ் முழுமை அடையாது ,இவைகளை முழுமைபடுத்த வேண்டும் .
ஹஜ்ஜின் வாஜிபுகள் ஏழு
==============================
1 – எல்லையில் இஹ்ராம் அணிந்து கொள்வது
2 – அரபாவில் சூரியன் மறையும் அந்த நேரம் வரை தங்குவது
3 – முஸ்தலிஃபாவில் தங்குவது
4 – அய்யாமுத்தஸ்ரிக்குடைய இரவுகளில் மினாவில் தங்குவது (அய்யாமுத்தஸ்ரிக்குடைய நாள்கள் பிறை 11,12,13, ஆகிய நாட்களாகும்
5 – அய்யாமுத்தஸ்ரிக்குடைய நாள்களில் கற்கள் எறிவது
6 – தலைமுடியை சிரைப்பது
7 – தவாஃபுல் வதாஃ செய்வது
“ இந்த வாஜிபுகளில் ஏதேனும் ஒன்றை விட்டு விட்டால் குர்பானி கொடுப்பது கொண்டு அதை அவன் ஈடு செய்ய வேண்டும் அந்த குர்பானியை ஹரத்தில் உள்ள ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் ( அப்பொழுது ) அப்பொழுதுதான் அவனது ஹஜ் கடமைகள் முழுமை பெரும் ,குறைவில்லாமல் அனைத்தையும் செய்ததாக ஆகும்.
இஹ்ராம் அணிந்து இருக்கும் கால கட்டத்தில் தடுக்கப்பட்டவை ஒன்பது .
===================================================
1 – முடிகளை நீக்குதல்
( தலை மற்றும் ஏனைய பாகங்களில் உள்ள முடியை நீக்குதல்)
2 – நகங்களை வெட்டுதல்
3 – ஆண்கள் தையல் ஆடை அணிதல்
4 – வாசனை உள்ள பொருள்களை உபயோகித்தல்
5 – ஆண்கள் தலையை மறைத்தல்
6 – திருமண ஒப்பந்தம் செய்தல்
7 – மனைவியை கட்டியத்ணைதல்
8 – உடல் உறவு கொள்ளுதல்
9 – வேட்டை பிராணிகளை கொள்ளுதால்
இவைகளில் ஒன்றை வேண்டும் என்றே செய்தால் அவனின் மீது குற்றபரிகாரம் உண்டு , கீழ் வரும் மூன்றில் ஒன்றை அவன் குற்றபரிகாரமாக தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.
முதலாவது : மூன்று நாள்கள் நோன்பு நோக்க வேண்டும்
இரண்டாவது :ஒரு ஆட்டை அறுத்து பலியிவது
மூன்றாவது : ஆறு ஏழைகளுக்கு உணவளிப்பது
உடல்உறவு கொண்டது முதலாவது தஹல்லுக்கு முன் இருந்தால்( கணவன் ,மனைவியின் ) ஹஜ்ஜும் கெட்டுவிடும் . முதலாவது தஹல்லுக்கு பின் இருந்தால் அவர்களது ஹஜ் கூடும் ,அவ்வாறு நடந்துகொண்டதற்க்காக ஒரு ஆட்டை அறுத்து பலியிட வேண்டும்.இத்தகைய தவறுகள் நிகழாமல் நாம் இறையச்ச உணர்வோடு இருந்து, சைத்தானின் சூழ்ச்சிகளுக்கும் , தீய எண்ணங்களுக்கும் இடம் தராமல் அத்தனை ஹஜ்ஜின் கடமைகளையும் இறைவனின் முழுப்பொருத்தத்தையும் பெற்று தவறுகள் நிகழா ஹஜ்ஜாக நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
அல்லாஹ் செய்யப்போகும் ஹஜ்யினை ,ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக , அவனின் முழுப்பொருத்தத்தையும் பெற்ற ஹஜ்ஜாக , பாவங்கள் அழிக்கப்பட்டு அன்று பிறந்த பாலகன் போல் ஆகிவிடுவார்கள் என்று நபிகளார் சொன்ன சொல்லுக்கு உரியவராக இருக்க ,விளங்க , நாம் சொல் ,செயலை தூய்மையுடன் செய்யவும்,சரிர சுகத்தையும், மனதைரியத்தையும் வல்ல இறைவன் தந்து முழு திருப்தியான ஹஜ்ஜஈ செய்ய உங்களுக்கும் ,எங்களுக்கும் அல்லாஹ் பாக்கியத்தை தருவானாக ஆமீன் யாராபல் ஆலமீன்
“ ஹஜ் வணக்கத்தின் வகைகள் மூன்று:
.தமத்துஃ 2- , கிரான், 3- இஃப்ராத்
ஹஜ்ஜூத் தமத்துஃ
=================
இது உம்ராவிற்கு மட்டும் இஹ்ராம் செய்தல் பின்னர் ஹஜ்ஜுடைய நேரத்தில் மக்காவில் தான் இருக்கும் இடத்தில் இருந்து ஹஜ்ஜிக்காக இஹ்ராம் கட்டிக்கொள்வது ,எல்லையில் “ லப்பைக் உம்ரதன் முகமத்திஅன் பிஹா இலல் ஹஜ் “ என கூறிக்கொள்ள வேண்டும்.
பொருள் : “ இறைவா உம்ராவை ஹஜ்ஜுடன் சேர்த்து நிய்யத் செய்தவனாக உன் சமூகம் வந்துவிட்டேன்” இதுவே ஹஜ்ஜி வகையில் சிறந்ததாகும் .குறிப்பாக ஹஜ்ஜிடைய நேரம் வருவதற்கு முன்னர் மக்காவிற்கு ஹஜ் செய்ய வருபவர்களுக்கு இதுவே மிக சிறந்தது , நபிகள்நாயகம் (ஸல் ) அவர்கள் செய்த ஹஜ் முறையும் இதுவே
ஹஜ்ஜூக் கிரான் :
==================
இது ஹஜ்ஜிக்கும் உம்ராவிற்கும் சேர்த்து ஒரே தடவையில் இஹ்ராம் கட்டிக்கொள்வதாகும் ,இவர் “ லப்பைக் உம்ரதன் வஹஜ்ஜன் “ என கூறிக்கொள்ள வேண்டும் ,இவர் ஆரம்ப உம்ரா செய்துவிட்டு பிறகு அந்த இஹ்ராமுடனேயே நஹ்ருடிய நாள் வரை இருக்க வேண்டும் , நஹ்ருடிய நாள் என்பது பத்தாவது நாளாகும் ,கிரான் ,உம்ராவை ஹஜ்ஜுடன் சேர்த்து விடுவதன் முலம் ஏற்படுகிறது ,இது பெரும்பாலும் , ஹஜ்ஜுடைய காலத்திற்கு முன்னர் உம்ரா செய்து முடித்து விட்டு பின்னர் ஹஜ்ஜிக்காக இஹ்ராம் கட்டிக்கொள்ளப் போதாத குறுகிய நேரத்தில் வருபவர்களுக்காகும்.
ஹஜ்ஜூல் இஃப்ராத் :
===================
இது ஹஜ்ஜை மட்டும் நிய்யத் செய்வதாகும் இவர் எல்லையில் இருந்து இஹ்ராம் கட்டிக்கொண்டு “லப்பைக் ஹஜ்ஜன் என கூறிக்கொள்ள வேண்டும் .
* “ மக்காவை நோக்கி வரக்கூடியவர் “ முதமத்தி ஃஆக (ஹஜ் செய்பவராக இருந்தால் அவர் மக்காவை வந்து அடைந்ததும் முதலாவதாக தவாஃப் செய்ய வேண்டும்,
பின் , ஸஃபா மர்வாவிற்கு இடையில் தொங்கோட்டம் ஓட வேண்டும் , அதன் பின் தன் தலைமுடியை சிரைத்துக் கொள்ள வேண்டும் ,பின் உம்ராவில் இருந்து நீங்கிக் கொள்ள வேண்டும், பின் எட்டாவாது நாளில் அவர் இருக்கும் இடத்தில் இருந்தே ஹஜ்ஜுக்காக இஹ்ராம் நிய்யத் செய்துகொள்ள வேண்டும் .
*மக்காவை நோக்கி வரகூடியவர் “கிரான்” ஆக (ஹஜ் ) செய்பவராக இருந்தால்,முதலாவதாக தவாஃப் செய்ய வேண்டும் பின், பின் , அவர் மக்காவை வந்தடைந்தும் ஸஃபா மர்வாவிற்கு இடையில் தொங்கோட்டம் ஓட வேண்டும் , அவர் தனது தலையை சிரைக்கவும் கூடாது ,முடியை வலித்து மொட்டையடித்தும் கொள்ளவும் கூடாது.அவர் தனது ஹஜ்ஜை முடிக்கும் வரை அதே இஹ்ராமோடுத்தான் இருக்க வேண்டும்
*மக்காவை நோக்கி வரகூடியவர் “இஃப்ராத்” ஆக ஹஜ் செய்பவராக இருந்தால் அவர் மக்காவை வந்து அடைந்ததும் முதலாவதாக ஆரம்ப தவாஃப் செய்ய வேண்டும், அவர் தனது ஹஜ்ஜை முடிக்கும் வரை தனது அதே இஹ்ராமோடுத்தான் இருக்க வேண்டும்,
3 – ஹஜ்ஜின் செயல்கள்
========================
எட்டாவது நாள் :
————————–
ஹஜ் செய்ய கூடியவர் இந்த எட்டாவது நாளில் பின் வரும் முறைப்படி ஹஜ்ஜுக்கு உரிய வேலைகளை செய்ய வேண்டும் .
1 – ஹஜ் செய்ய கூடியவர் எந்த இடத்தில் இருக்கின்றாரோ , அவர் அந்த இடத்தில் இருந்தே ஹஜ்ஜுக்காக இஹ்ராம் செய்ய வேண்டும் , ஹஜ் செய்ய கூடியவர் குளித்து தன்னை சுத்தப்படுத்திக் கொள்வதும் ,அத்தர் போன்ற வாசனை திரவியங்களை பூசிக்கொள்வதும் சுன்னத் ஆகும். அவர் இஹ்ராம் ஆடையை அணிந்து கொள்ள வேண்டும் ,அவர் உள்ளதால் ஹஜ் செய்வதற்கு எண்ணி நிய்யத் செய்து கொள்ள வேண்டும்.
மேலும் அவர்
“ லப்பைக்க ஹஜ்ஜன் “லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் , லப்பைக் லா ஷரீக லக லப்பைக் , இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க் லா ஷரீக லக “ என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும்.
2 – ஹஜ் செய்யக் கூடியவர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியபின் மினாவை நோக்கி வெளியாகி செல்ல வேண்டும் . மினாவில் அவர் லுஹர் , அஸர் , மக்ரிப் , இஷா, ஃபஜ்ர் போன்ற தொழுகைகளை தொழ வேண்டும் ,நான்கு ரக்அத்துக்களை இரண்டு க்அத்துக்கலாக சுருக்கி தொழ வேண்டும் , இது இறைவனால் வழங்கப்பட்ட சலுகை ,இதே சட்டம் தான் பெருநாள் தினத்தன்றும் அதை அடுத்து வரக்கூடிய அய்யாமுத் தஸ்ரிக்குடைய மூன்று தினத்திலும்.
ஒன்பதாவது நாள் :
==================
ஒன்பதாவது தினத்து சூரியன் உதயமானதும் ஹஜ் செய்யகூடிய ஹஜ் அர ஃபாவை நோக்கி செல்ல வேண்டும் .அங்கே அர ஃபாவில் அவர் லுஹர் , அஸர் ஆகிய இரு தொழுகைகளையும் ,ஒரு பாங்குடனும் ,இரு இக்காமத்துடனும் ,சுருக்கி முற்படுத்தி சேர்த்து தொழ வேண்டும்,
2 – அர ஃபாவில் தங்கும் நேரம் சூரியன் மத்தியை விட்டும் சாய்ந்த பிறகும் லுஹர் , அஸர் ஆகிய இரு தொழுகைகளையும் சேர்த்தும் ,சுருக்கியும் தொழுத பிறகும் தான் ஆரம்பம் ஆகிறது அர ஃபா மைதானத்தில் கால்வாய்களை தவிர மற்ற எல்லா இடமும் அர ஃபா மைதானத்தில் தங்கும் இடம் தான் , அர ஃபா மைதானத்தில் கால்வாய்கள் உள்ள இடத்தில் தங்ககூடாது , கால்வாய்கள் உள்ள இடத்தில் தங்குவது தடை செய்யப்பட்டு உள்ளது .
3 – ஹஜ் செய்யகூடிய ஹாஜ் அர ஃபாவில் தங்க வேண்டும் , அவர் கிப்லாவை நோக்கியவராக இருந்து திக்ர் , துஆ , பாவமன்னிப்பு , மற்றும் மனதில் நாடியவைகளையும் அந்த இடத்தில் மனம் உருகி இறையச்ச உணர்வோடு வல்ல இறைவனிடம் அதிகம் அதிகம் கேட்க வேண்டும் , திக்ர் , துஆ போன்ற அமல்களிலும் அதிகம் அதிகம் செய்த வண்ணமாக இருக்க வேண்டும் , அங்கு இருக்கும் நேரத்தையும் , காலத்தையும் ,மிகவும் பயன் பெரும் வகையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் , சூரியன் மறைந்தவுடன் அமைதியாக அர ஃபாவை விட்டு முஸ்தலிஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும் ,
முஸ்தலிஃபாவில் மக்ரிப் , இஷா, ஒரு பாங்குடனும் ,இரு இக்காமத்துடனும் ,பிற்படுத்தி சேர்த்து தொழ வேண்டும், அங்கு இஷா தொழுகையை இரண்டு ரக்அத்தாக சுருக்கி தொழ வேண்டும் , அந்த இரவில் முஸ்தலிஃபாவில் தங்க வேண்டும்
,பழகினமாணவர்களும் ,நோயாளிகளும் . அவர்களுக்கு உதவியாக உள்ள தோழர்களும் ,நடுநிசிக்கு பிறகு அல்லது சந்திரன் மறைந்ததற்கு பிறகு முஸ்தலிஃபாவில் இருந்து மீனாவிற்கு திரும்பி செல்வதற்கு ஆகுமானதாகும் ,என்றாலும் , ஃபஜ்ர் தொழுகையை முஸ்தலிஃபாவில் தொழும் வரை அங்கே தங்கி இருப்பதுதான் சிறந்தது
பத்தாவது நாள் :
=================
1 – பத்தாவது நாளில் ஹாஜ் முஸ்தலிஃபாவில் ஃபஜ்ர் தொழுகையை தொழ வேண்டும் ,மேலும் அங்கிருந்து பயணமாகும் வரை திக்ர் , துஆ , போன்ற வணக்கங்களில் அதிகமாக ஈடுபட வேண்டும் பின் அவர் முஸ்தலிஃபாவில் இருந்தோ ,அல்லது செல்லும் வழியிலோ ஏழு கற்களை பொறுக்கி எடுத்த பின் மினாவை நோக்கி செல்ல வேண் டும்.
2 – ஹாஜ் மினாவை வந்தடைந்து விட்டால் பின்வரும் காரியங்களை செய்ய வேண்டும்
முதலாவதாக
————————–
ஜம்ரத்துல் அகபாவிற்கு கல்லேரிய வேண்டும் . ஜம்ரத்துல் அகபா என்பது மக்காவிற்கு மிக அருகாமையில் இருக்கும் ஜம்ராவாகும் .அந்த ஜம்ராவிற்கு அவர் தொடர்சியாக ஏழு கற்களைக் கொண்டு எறிய வேண்டும் ,ஒவ்வொரு கற்களை எறியும் போதும் அல்லாஹ் அக்பர் என தக்பீர் சொல்ல வேண்டும்
இரண்டாவதாக :
——————————-
முகமத்திஆக , அல்லது கிரானாக ஹஜ் செய்பவராக அவர் இருந்தால் ,அவர் (பத்தாவது நாள் ) சூரியன் உதித்தபின் மினாவிலோ ,அல்லது மக்காவிலோ ,அல்லது ஹரத்தின் ஏனைய பகுதிலோ ,அவர் குர்பானியை அறுக்க வேண்டும் ,பின் அவரும் அதில் சாப்பிட்டு ஏழைகளுக்கும் கொடுக்க வேண்டும்.
மூன்றாவதாக :
————————–
ஹாஜ் தனது தலைமுடி முழுவதையும் மொட்டையடித்து வழித்துக் கொள்ள வேண்டும். தலைமுடிகளை கத்தரிப்பதை வீட மொட்டையடித்து வழித்துக் கொள்வதுதான் மிகவும் சிறந்தது , பெண்கள் அவர்களின் தலையில் ஒவ்வொரு பின்னல்களில் இருந்தும் விரலின் நுனி அளவு கத்தரித்துக் கொள்ள வேண்டும்.
நான்காவதாக :
————————-
பிறகு ஹாஜ் மக்காவை நோக்கி செல்ல வேண்டும் பின் இஃபாலாவுடைய தவாஃப்பை அவர் செய்ய வேண்டும் ,அதுதான் ஹஜ்ஜுடைய தவாஃப் பின் அவர் முகமத்திஆக ஹஜ் செய்பவராக இருந்தால் ,அல்லது கிரானாக .அல்லது இஃப்ராத்தாக ஹஜ் செய்து தவாஃபுல் குதூமுடன் அவர் தொங்கோட்டம் ஓடி இருக்காமல் இருந்து இருந்தால் , அவர் அப்போதுஸஃபா மர்வாக்கு இடையே தொங்கோட்டம் ஓட வேண்டும் .
(ஹஜ்ஜுடைய தவாஃப்பான ) தவாஃபுல் இஃபாலாவை அய்யாமுத்தஸ்ரிக்குடைய நாள்கள் வரைக்குமோ ,அல்லது பிறகு வரைக்குமோ பிற்படுத்துவது ஆகுமானதாகும்.
ஐந்தாவதாக :
———————–
அதன் பின் ஹாஜ் மினாவை நோக்கி திரும்பி செல்ல வேண்டும் ,பின் மினாவில் பதினோறாவது ,பனிரெண்டாவது ஆகிய இரு இரவுகளிலும் தங்க வேண்டும் ,
4 – பதினோறாவது நாள் :
=========================
மினாவில் தங்கி இருந்து கொண்டு செய்ய வேண்டிய செயல்கள்
================================================
ஹாஜ் மினாவில் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து இருபத்தொரு கர்களை பொறுக்கி எடுக்க வேண்டும் பின் அக்கர்களால் சூரியன் உச்சியை விட்டும் சாய்ந்த பிறகு முதலாவது ஜம்ராவிற்கு ஏழு கல்களை ஒவ்வொன்றாக எறிய வேண்டும் ,முதலாவது ஜம்ரா என்பது கைஃப் பள்ளியை அடுத்து உள்ள சிறிய ஜம்ரா வாகும் ,ஒவ்வொரு கல்லும் எரியும் பொழுதும் தக்பீர் சொல்ல வேண்டும் ,ஏழு கல்லையும் எரித்தபின் கிப்லாவை முன்னோக்கியவனாக அல்லாஹ் விடத்தில் பிராத்தனை செய்ய வேண்டும்,
பின் ஏழு கல்லை கொண்டு நடுவில் உள்ள ஜம்ராவிற்கு கல் எரிய வேண்டும் ஒவ்வொரு கல்லும் எரியும் பொழுதும் தக்பீர் சொல்ல வேண்டும் ,ஏழு கல்லையும் எரித்தபின் கிப்லாவை முன்னோக்கியவனாக அல்லாஹ் விடத்தில் பிராத்தனை செய்ய வேண்டும்,
பின் ஏழு கல்லை கொண்டு அகபா ஜம்ராவிற்கு கல் எரிய வேண்டும் ஒவ்வொரு கல்லும் எரியும் பொழுதும் தக்பீர் சொல்ல வேண்டும் ,ஏழு கல்லையும் எரித்தபின் அங்கே நிற்காமல் ஒதுக்கப்பட்டு உள்ள பாதை வழியாக சென்று விட வேண்டும்
பனிரெண்டாவது நாள் :
========================
1 – பதினோறாவது நாளில் எவ்வாறு அவன் செய்தானோ அவ்வாறே சூரியன் உச்சியை விட்டும் சாய்ந்த பிறகு மூன்று ஜம்ராகளுக்கும் அவர் கல் எரிய வேண்டும் . ஒவ்வொரு கல்லும் எரியும் பொழுதும் தக்பீர் சொல்ல வேண்டும்
2 – ஹாஜ் இரண்டு நாள்களில் அவரது ஹஜ்ஜி கிரிகைகளை அவசரமாக முடித்துக் கொள்ள நாடினால் பனிரெண்டாவது நாளின் சூரியன் மறையும் முன் அவன் மினாவை விட்டும் வெளியாகி விட வேண்டும் , அவர் அவ்வாறு அவசரமாக முடித்துக் கொள்ள விரும்பவில்லை என்றால் அது தான் மிக மிக சிறந்தது
அவர் பதிமூன்றாம் இரவிலும் தங்கி மேல் சொன்னது போல் சூரியன் உச்சியை விட்டும் சாய்ந்த பிறகு மூன்று ஜம்ராகளுக்கும் அவர் கல் எரிய வேண்டும் ,இத்துடன் அவனின் ஹஜ்ஜுடைய கடமைகள் முடிந்துவிடுகிறது ,
ஹாஜ் தனது ஊருக்கு செல்ல நாடினால் அவர் பிரியாவிடைத் தவாஃப்கிய
தவாஃபுல் வாதஉ “வை ஏழு சுற்றுகள் சுற்றித் தவாஃப் செய்ய வேண்டும் ,பின் இரண்டு ரக்காத்துகள் அங்கே அவர் தொழுதுவிட்டு பிரயாணம் ஆகிவிட வேண்டும்
மாதவிடாய் பெண்களும் , பிள்ளை பேறு , இரத்தபோக்கு பெண்கள் , பிரியாவிடைத் தவாஃப்கிய , தவாஃபுல் வாதஉ “வை செய்ய வேண்டிய அவசியம் இல்லை
கவனத்தில் கொள்ள வேண்டியவை
=================================
1 – ஹாஜ் மினாவில் பெருநாள் நாள் , அதற்குப் பிறகு வரக்கூடிய மூன்று நாள்களும்மான அய்யாமுத்தஸ்ரிக்குடைய எல்லா நாள்களிலும் .ஐந்து நேர தொழுகையையும் ஜம்உ செய்து ஒன்று சேர்த்து தொழாமல் ,அதற்குரிய நேரங்களில் சுருக்கித் தொழ வேண்டும் ,
2 – அர ஃபாவில் மலைக்கு மேலே ஏறுவது ஆகுமானதாக ஆக்கப்படவில்லை ஏறுவது கூடாது ,நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் ஹஜ் செய்யும் இந்த கால கட்டத்தில் ஏறவில்லை , அதேபோல அர ஃபா தினத்தில் ஹாஜ் நோன்பு நோற்பதும் தடுக்கப்பட்டுள்ளது . ஏனெனில் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் அர ஃபா தினத்தில் நோன்பு நோற்க்காமல் தான் இருந்தார்கள் ,
3 – முகமத்திஆக ,கிரானாக ஹஜ் செய்பவர் குருபானி கொடுப்பது கட்டாய கடைமையாகும் அவர் தனது குர்பானியை பெருநாள் நாளிலோ , அய்யாமுத்தஸ்ரிக்குடைய நாள்களிலோ , மினாவில் அல்லது மக்காவில் , அல்லது ஹரத்தின் ஏனைய பகுதியில் அறுத்துக் கொடுக்க வேண்டும் இச்சட்டத்தில் இருந்து ஹரம் எல்லைக்குள் வசிப்பவர்கள் நீக்கப்படுகின்றனர் , ( அவர்கள் மீது இந்த சட்டம் பொருந்தாது )
4 – குர்பானி கொடுக்க வேண்டிய மிருகங்கள் ஒட்டகம், மாடு, ஆடு இவைகளாக இருக்க வேண்டும், ஏழு பேர்களுக்கு ஒரு ஒட்டகம் அல்லது ஒரு மாடு போதுமானதாகும் .
5 – அரஃபா தினத்தில் அதிகம் அதிகமாக இறைவனிடத்தில் மனம் உருகி , துவா செய்ய வேண்டும் , அரஃபா உள்ள ஒவ்வொரு நிமிடத்தையும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
“ லாஇலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லா ஷரீக லஹு , லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷஇன் கதிர் “ என்பதை கொண்டு அதிகம் அதிகமாக திக்ர் செய்வதும் ,மார்க்கமாக்காப் பட்டுள்ளது.
6 – ஹாஜ் தனது நாவை ,தனது கேள்வியை .தனது பார்வையை பேனி நடப்பதும் , பாதுகாத்துக் கொள்வதும் ,வீண் செயல்கள் ,கெட்ட நடத்தைகள் இவைகளில் இருந்து தவிர்த்து கொள்வதும் கட்டாய கடமையாகும் ,
துவா , பாவமன்னிப்பு ,இறைச்சுதல் , பாவங்களில் இருந்து மீட்சி பெருதல் ,நல்லதை ஏவி ,தீயதை விட்டும் தடுத்தல், போன்ற நற்செயல்களில் அதிகம் அதிகமாக ஈடு பட வேண்டும்.
சிறிய சிறிய தவறுகள் தன்னையும் அறியாமல் நடந்து இருந்தால் அல்லாஹ் முழுமையாக மன்னித்து எல்லோருக்கும் அல்லாஹ்அளப்பரிய நன்மைகளை தரும் ஹஜ்ஜாகவும் ,அவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாகவும் , மனம் இறைந்து கேட்கப்பட்ட துவாக்களை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாகவும் , பாவங்கள் அழிக்கப்பட்டு அன்று பிறந்த பாலகன் போல் ஆகுவார்கள் என்ற நாயகம் ( ஸல் ) அவர்கள் சொன்ன வாக்குக்கு உரியவராக உங்களையும் எங்ககளையும் ஆக்கி அருள்வானாக என துவா செய்தவனாக நிறைவு செய்கிறேன் , ஆமின் யாரப்பல் ஆலமீன் ,
====================
தாங்கள் படிப்பதோடு பலரும் பயன் பெரும் வகையில் share செய்யவும்.
துவாவில் எங்களுக்காகவும் அந்த வல்ல இறைவனிடம் கேட்கவும .

Close