திருச்சி விமானநிலையத்தில் இருந்து அதிரையை நோக்கி வந்தவர் மீது லாரி மோதி விபத்து! சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்தது!

image

அதிரை நெசவுத்தெருவை சேர்ந்தவர் வாத்தியப்பா. இவரது மகன் ராஜிக் அஹமது. கார் ஓட்டுனராக உள்ளார். இவர் இன்று அதிகாலை திருச்சி விமான நிலையத்திற்கு சென்றுவிட்டு அதிரைக்கு திரும்பி வந்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் வல்லம் அருகே காரில் காற்று குறைவாக இருப்பதாக எண்ணி காரை விட்டு இறங்கி காற்றை சோதித்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் பின்னால் வந்த ஒரு லாரி பயங்கரமாக அவர் மீது மோதியது. இதனை அடுத்து அவரை தஞ்சை வினோதன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதில் ராஜிக் அஹமது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். விபத்து குறித்து மேலும் தகவல்கள் விரைவில்…

Close