சிறு வரிகள் !!!

அஸ்ஸலாமு அலைக்கும்,
இரு தினங்களுக்கு முன்பு சாலையோரம்
வயது முதிர்ந்த பெண் ஒருவரை கண்டேன்.
அவர்கள் சாலையில் கிடக்கும் குப்பைகளை
அள்ளிக் கொண்டு இருந்தார்கள். அப்பெண்மனி
ஹிஜாபுடன் தலை மரைத்த நிலையில்
இச்செயலை செய்து கொண்டிருந்தார். சிலர்
ஒவ்வொரு மத பெயரைய் வைத்து யாசகம் தேடி
அலைந்து கொண்டிருப்பவர் மத்தியில் இந்த
பெண்ணின் செயல் என் மனதில் ஆழமாக
பதிந்தது.
உடலில் வலு இருப்பவர்கள் கூட யாசகம் கேட்டு
அலையும் இக்காலத்தில் இப்படி ஒரு பெண்மனி.
குப்பை அள்ளுவதை கேவலமாக கருதுவர் சிலர்.
உடலில் வலு இருந்து பிச்சை எடுப்பதுதான்
கேவலத்திலும் கேவலம்.
குப்பை அள்ளுபவர்கள் என்கின்ற என்னத்தை
அடியோடு மாற்றிவிட வேண்டும்.

-அதிரை சாலிஹ்

image

Close