அதிரை குளங்களுக்கு மீண்டும் ஆற்று நீர் வருகை!(படங்கள் இணைப்பு)

அதிரையில் சில மாதங்களுக்கு முன் சிஎம்பி வாய்கால் வழியாக ஆற்று நீர் அனைத்து குளங்களுக்கும் வருகை தந்த நிலையில் மீண்டும் ஆற்று நீர் கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வந்தது.

இதனையடுத்து முயற்சியின் பலனாக மீண்டும் ஆற்று நீர் அதிரை குளங்களுக்கு வந்து கொண்டு இருக்கிறது .மேலும் ஆற்று நீர் வரும் பகுதியில் உள்ள குப்பைகளை பேரூராட்சி ஊழியர்கள் சரி செய்து வருகிறார்கள்.

அதிரை குளங்களுக்கு மீண்டும் தண்ணீர் கொண்டுவர முயற்சி செய்த அதிரை பேரூராட்சி நிர்வாகத்திற்கும் ,சமூக ஆர்வலர்களுக்கும் அதிரை பிறை சார்பாக நன்றிகளையும் ,பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.  


      

Advertisement

Close