Adirai pirai
posts

அமீரக பிரதமர் ஷேக் முஹம்மது அவர்களின் மூத்த மகன் மரணம்

Sheikh-Rashid-bin-Mohammed-bin-Rashid-Al-Maktoum

அமீரக துணை ஜனாதிபதியும் பிரதமருமான துபாய் அதிபர் சேக் முஹம்மத் பின் ராசித் அல் மக்தூம் அவர்களின் மூத்த மகன் சேக் ரஷீத்(34) இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, துபாயில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அமீரகம் முழுவதும் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

“நாங்கள் இறைவனுக்கே உரித்தானவர்கள், அவனிடமே திரும்ப வேண்டியவர்கள்” என்று துபாய் மன்னர் அலுவலகம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.

 

தகவல்: கல்ஃப் நியூஸ்
செய்தி: அதிரை பிறை.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy