மக்கா ஹஜ் பயணிகளுக்காக ஜித்தாவில் TNTJ நடத்திய இரத்ததான முகாம் (படங்கள் இணைப்பு)

9 Jeddah TNTJ 10th Blood Campஹஜ் செய்வதற்காக உலகம் முழுவதிலிருமிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் சவுதி அரேபியாவிலுள்ள மக்கா நகரத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் தேவைப்படுவோருக்கு வழங்குவதற்காக நேற்று (18-09-15 வெள்ளிக்கிழமை) ஜித்தாவிலுள்ள கிங் ஃபஹத் மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் ஏற்பாடு செய்த இந்த முகாமில் 165 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 129 பேரிடமிருந்து இரத்தம் தானமாக பெறப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல செயலாளர் சலாஹூதீன், இந்த முகாம் பற்றி பேசும் போது, ஹஜ் செய்வதற்காக உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் மக்காவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். விபத்து, அறுவைசிசிட்சை போன்ற காரணங்களுக்காக அவர்களில் தேவைப்படுவோருக்காக இந்த முகாமை நாங்கள் நடத்துகின்றோம். இங்கு வழங்கப்பட்ட இரத்தமானது மக்கா, மதீனா நகரங்களுக்கு எடுத்து செல்லப்பட இருக்கின்றது. ரமலானில் உம்ரா செய்ய வருபவர்கள் மற்றும் ஹஜ் செய்ய வருபவர்களுக்காக வருடந்தோறும் இதுபோன்ற முகாம்களை நாங்கள் நடத்தி வருகின்றோம் என்று குறிப்பிட்டார்.

கிங்.பஹத் மருத்துவமனையின் இரத்ததான பிரிவு ஒருங்கிணைப்பாளர் உமர் அலி மற்றும் இரத்தவங்கி குழுவினர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த மனிதநேய பணியினை பாராட்டியதுடன் தவ்ஹீத் ஜமாஅத் இதற்கு முன் வழங்கிய இரத்ததான முகாம்கள் பற்றிய செய்தியை சுகாதாரத்துறை சார்பாக சவுதி அரசு இதழில் வெளியிட்டிருக்கின்றோம், உங்களை போன்று ஏராளமானோர் இதுபோன்ற தானங்களை செய்ய முன்வர வேண்டும் என்றனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஜித்தா மண்டல துணை தலைவர் நெய்னா முஹம்மது, இந்த முகாம் பற்றி பேசும் போது,

அவசர காலங்களில் மட்டுமின்றி உம்ரா, ஹஜ் பயணிகளுக்கு உதவும் நோக்கத்தில் இது போன்ற முகாம்களையும் நடத்தி வருகின்றோம். இதன்றி இந்திய சுதந்திர தினம், இந்திய குடியரசு தினம் போன்ற நிகழ்வுகளிலும் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்து வருகின்றோம். மனிதநேயத்தை வெறும் வார்த்தைகளால் அல்ல, செயல்பாடுகளால் சொல்வோம் என்ற எண்ணத்தில் இதை செயது வருகின்றோம். இது ஜித்தா மண்டலம் நடத்தும் 10 வது முகாமாகும் என்று குறிப்பிட்டார்.

இப்படிக்கு

Maheen (மாஹீன்),

Jeddah

05503635394 Jeddah TNTJ 10th Blood Camp8 Jeddah TNTJ 10th Blood Camp10 Jeddah TNTJ 10th Blood Camp

1 Jeddah TNTJ 10th Blood Camp 3 Jeddah TNTJ 10th Blood Camp 4 Jeddah TNTJ 10th Blood Camp 8 Jeddah TNTJ 10th Blood Camp 9 Jeddah TNTJ 10th Blood Camp 10 Jeddah TNTJ 10th Blood Camp 12 Jeddah 10th Camp Tamil3 Jeddah TNTJ 10th Blood Camp

Close