அதிரையில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி! அனுமதியில்லாத பகுதியில் விநாயகர் சிலை வைப்பு!

IMG-20150920-WA0019

 

அதிரையில் இன்று விநாயகர் சதுர்த்தி நடைபெற உள்ளது. இதற்காக கடந்த சில வாரங்களாக அனைத்து தரப்பு சமுதாய அமைப்புகளையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும் பல கட்டுபாடுகளுக்கு மத்தியில் அமைதியாக இந்த விநாயகர் சதுர்த்தியை நடத்த முடிவெடுக்கப்பட்டது. காவல் துறையால் அனுமதிக்கப்பட்ட சிலைகளை மட்டுமே இன்று கரைக்க முடியும். வருடா வருடம் அதிரையில் இந்த நிகழ்ச்சி அமைதியாக நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் காவல்துறையின் உத்தரவை மீறி முத்தம்மாள் தெருவில் புதிதாக சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நேற்று இரவு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் சிலையை அகற்ற காவல் நிலையத்துக்கு சென்று மனு அளித்தனர்.

இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர், ஐக்கிய தேசிய மக்கள் கட்சி தலைவர் அதிரை M.M.இப்ராஹிம் ஆகியோர் உடனிருந்தனர்.IMG-20150920-WA0020IMG-20150920-WA0022IMG-20150920-WA0021

 

 

Close