வாணியம்பாடியில் விநாயகர் சதுர்த்தியில் கலந்துக்கொண்டவர்களுக்கு தண்ணீர் விநியோகித்த முஸ்லிம்கள்! (படங்களுடன்…)

VINAவேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று முந்தினம் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடைபெற்றது. வாணியம்பாடியில் இந்து முன்னனியினர் சார்பில் ஆம்பூர்பேட்டையில் கொவிலில் இருந்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்றனர். இதில் ஊர்வலமாக சென்ற இந்து மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் பொருட்டு அங்கிருந்து முஸ்லிம் இளைஞர்கள் சிலர் இதற்காக தண்ணீர் மூட்டைகளை வாங்கி குடிநீர் பாக்கெட்டுகளை வழங்கினர்.

பல பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இரு தரப்பினர் மத்தியில் மோதலில் போய் முடிந்துகொண்டிருக்கும் நிலையில் வாணியம்பாடியில் நடைபெற்ற இச்சம்பவம் பலரை ஆச்சரியப்பட வைத்தது. இந்த இளைஞர்களுக்கு ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட இந்து மத சகோதர சகோதரிகள் நன்றி தெரிவித்து சென்றனர்.

இது போன்ற மக்கள் அனைத்து பகுதிகளில் இருக்கும் வரை எந்த தீய சக்தியாலும் நம் நாட்டில் பேணி காக்கப்படும் இந்து முஸ்லிம் சகோதரத்துவத்தை அசைக்க முடியாது.

படங்கள்: புளியங்குடி அமீன்

செய்தி: அதிரை பிறை

Close