அதிரையில் அசம்பாவிதங்களை தடுக்க போலிஸ், அதிரடி படையினர் குவிப்பு (படங்கள் இணைப்பு)

police2

அதிரையில் இன்று மாலை விநாயகர் சதுர்த்து ஊர்வலம் நடத்தப்படுகிறது. இந்த ஊர்வலத்தை அதிரை இந்து முன்னனியினர் 26 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இந்த 26 ஆண்டுகளில் அதிரையில் சில ஊர்வலங்கள் அமைதியாகவும் சில ஊர்வலங்கள் பதற்றமானதாகவும் இருந்தது. அதிரையை அடுத்துள்ள முத்துப்பேட்டையில் வருடா வருடம் இந்த ஊர்வலத்தின் போது ஏதாவது அசம்பாவிதங்கள் தொடர்ந்துக்கொண்டுதான் உள்ளன.

எனவே இந்த ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க கடந்த சில வாரங்களாக அமைதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதில் அனைத்து சமுதாய இயக்கங்களும் கலந்துக்கொண்டன.  காவல் துறையால் அனுமதிக்கப்பட்ட சிலைகளை மட்டுமே இன்று கரைக்க முடியும். இதுபோன்ற பல்வேறு கட்டுபாடுகளுடன் இந்த ஊர்வலம் நடத்தப்பட உள்ளன.

இன்று நடைபெறும் ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்கவும், அப்படி ஏதாவது நடந்தால் அதனை தடுக்கவும் அதிரை ஏராளமான போலிஸ் வாகனங்களில் 500 க்கும் மேற்பட்ட போலிஸார்கள் அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் நமது அதிரை பிறை செய்தியாளரிடம் கூறுகையில் “பலத்த பாதுகாப்புடன் இந்த விநாயகர் ஊர்வலம் நடத்தப்படுகிறது, இதனை சீர்குலைக்கும் வகையிலும், அசம்பாவிதத்தை தூண்டும் செயல்களிலும், பொதுமக்களை துன்புறுத்தும் வகையில் யாரவது ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதற்க்கு அனைத்து சமுதாய மக்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” என்று கூறினார்.

police1

படங்கள் மற்றும் செய்தி: நூருல் இப்னு ஜஹபர் அலி

Close