அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மீன் குத்தகை ஏலம்!(படங்கள் இணைப்பு)

அதிரை பேரூராட்சி நிர்வாகத்தின் முயற்சியில் அதிரையில் உள்ள அனைத்து குளங்களிலும் C.M.P.வாய்க்கால் வழியாக தண்ணீர் நிரப்பட்டது. இதன் பலனாக நேற்றைய தினம் பேரூராட்சி சார்பாக மீன் குத்தகை பற்றிய பொது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது .

இதனையடுத்து அதிரை பேரூராட்சிக்கு சொந்தமான குளங்களுக்கு மீன் குத்தகை (01-01-2015) முதல் (31-12-2015) காலத்திற்கான ஏலம் இன்று விடப்பட்டது . இந்த மீன் குத்தகை ஏலம் இன்று காலை 11 மணிக்கு பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் முன்னிலையில் நடைபெற்றது . மேலும் இதில் தமிழக அரசால் ரூ .50 லட்சம்  நிதி ஒதிக்கி புதுப்பிக்கப்பட்ட செட்டியா குளம் ரூ 30,000 மேல் ஏலத்தில் சென்று உள்ளது.இந்த ஏலத்தின் மூலம் அதிரை பேரூராட்சிக்கு வருமானம் கிடைத்து உள்ளது குறிப்பிடதக்கது. இந்த ஏலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .


Advertisement

Close