Adirai pirai
islam

சவூதியில் மதம் கடந்த மனிதநேயம்!

Tamil-Daily-News-Paper_9998699426652ச‌வூதியில் விபத்தில் உயிரழந்து 2 மாதகாலமாக இருந்த‌ தமிழகத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் உடலை தாயகத்திற்கு அனுப்ப வேண்டிய செலவுகளை ஏற்று ஏற்பாடுகளை செய்த அரேபியர்  மற்றும் தமிழர்கள் … சவூதி அரேபியா அல்ஹஸ்ஸாவில் பணிபுரிந்து வந்த திருச்சி மாவட்டம் பெரம்பலூரை சேர்ந்த செல்வகுமார்(வயது35)என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு  விபத்தில் சிக்கி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இரண்டு மாதங்களாகியும் அவரது சடலம் ஊருக்கு அனுப்பப்படாமல் இருந்த தகவல் அறிந்து அல்ஹஸ்ஸா கிளை இந்தியன் சோஷியல் ஃபோரம் சமூக நலத்துறை பிரிவை சேர்ந்த நெல்லை ஜின்னா ம ற்றும் அதிரை ரியாஸ் அகமது  ஆகியோர் இறந்தவரின் ஸ்பான்சர் அப்துல்லாஹ் முகம்மது யூசுப் அல்சாஹர் அவர்களுடன் இணைந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து  செல்வகுமார் சடலத்தை அவரது சொந்த ஊரான பெரம்பலூருக்கு அனுப்பி வைப்பதற்கான அனைத்து உதவிகளையும் மேற்கொண்டனர்.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு அல்ஹஸ்ஸாவிலிருந்து சடலம் தம்மாம் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தம்மாமிலிருந்து இன்று இரவு 9மணிக்கு லங்கா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நாளை(திங்கட்கிழமை) காலை 8.50 மணிக்கு திருச்சி வந்தடையும் என்ற தகவலையும் இறந்தவரின் ஊரை சேர்ந்த முத்துசாமி சுந்தர் என்பவர் மூலம் செல்வகுமாரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தியன் சோஷியல் ஃபோரம் சமூக நலத்துறையுடன்  இணைந்து சவூதி அரேபியாவை சேர்ந்த அரேபியர் அப்துல்லாஹ் முகம்மது யூசுப்  செல்வக்குமார் சடலத்தை ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான அனைத்து செலவுகளையும் தாமே ஏற்றுக்கொண்டு விமான நிலையம் வரை சடலத்தை அனுப்பி வைக்கும் வரை உடனிருந்து அனைவரையும் நெகிழ செய்தார்.இதே போல் கடந்த 9ந்தேதி பெரம்பலூர் விசுவகுடி கிராமத்தை சேர்ந்த ஜமால் முகம்மது(வயது32)என்பவர் ரியாத் ஹைவே ரோட்டில் நிகழ்ந்த வாகன விபத்தில் பலியானார்.

13ந்தேதி அவரது குடும்பத்தாரின் வேண்டுகோளை ஏற்று ஜின்னா மற்றும் ரியாஸ் அகமது அதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு கடந்த 18ந்தேதி(வெள்ளிக்கிழமை)இறந்த ஜமால் முகம்மது ஜனாஸாவை நல்லடக்கம் செய்தனர்.இறந்தவர் மாற்று மதத்தை சேர்ந்தவர் என வேறுபாடு காணாமலும்,மற்றொரு தமிழர்  ஜமால் முகம்மது உடல் நல்லடக்க நிகழ்வுக்காகவும் தமது மூன்று நாட்கள் விடுப்பு எடுத்து மதம் கடந்த மனிதநேயம் பாதுகாக்கப்பட வேண்டும். என்ற சமூக அக்கறையுடன் கம்பெனியில் விடுப்பு எடுத்து தங்களது கடமையை செய்த நெல்லை ஜின்னா மற்றும் அதிரை ரியாஸ் அகமது ஆகியோரை இந்தியன் சோஷியல் ஃபோரம் தேசிய துணைத்தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி மற்றும் மாநில பொதுசெயலாளர் காயல் மக்தூம் நைனா,கிளைத்தலைவர் மயிலாடுதுறை நாசர்,நாச்சிகுளம் யூசுப்கான் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்தி பாராட்டினர்.

நன்றி: தினகரன்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy