மேலப்பாளையத்தில் பதற்றம்! பள்ளிவாசலுக்குள் புகுந்து முஸ்லிம்கள் மீது தாக்குதல்!

மேலப்பளையம் லுஹா ஆலிம் அவர்கள் சென்னை செல்வதற்காக மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் வண்டியில் சென்று கொண்டிருந்த போது ஒரு குட்டியானை டிரைவர் அவருடைய பைக்கின் மோதி ஆலிம் அவர்களை மோதினான். இதில் ஆலிம் அவர்களுக்கு தலையில் அடிபட்டு 8 தையல்கள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் லுஹா ஆலிம் விபத்துக்குள்ளான ஆன செய்தியைக் கேள்விப்பட்ட பொதுமக்கள் பதறியவர்களாக அந்த இடத்தில் ஒன்று கூடியுள்ளனர். அப்போது போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தன்னை அடித்ததாக பொய்யான புகாரை சின்ன யானை ஓட்டுனர் மேலதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளான். இதனால் ஏசி மாதவன் தலைமையில் அதிகமான போலீஸார் மஸ்ஜிதுர் ரஹ்மானில் நுழைந்து தொழுது கொண்டிருந்தவர்கள் மீதும் நிர்வாகிகள் மீதும் கடுமையாக தடியடி நடத்தி மூன்று சகோதரர்களை இழுத்துச் சென்றுள்ளனர். தற்போது மாநிலத்தின் வழிகாட்டுதல் பிரகாரம் முன்னெடுப்புகள் எடுத்து வருகிறோம். 

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close