Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் (படங்கள் இணைப்பு)

12011260_1068884593136025_2316417900794702489_nஅதிரையில் இன்று மாலை விநாயகர் சதுர்த்து ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை அதிரை இந்து முன்னனியினர் 26 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இந்த 26 ஆண்டுகளில் அதிரையில் சில ஊர்வலங்கள் அமைதியாகவும் சில ஊர்வலங்கள் பதற்றமானதாகவும் இருந்தது.

எனவே இந்த ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க கடந்த சில வாரங்களாக அமைதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதில் அனைத்து சமுதாய இயக்கங்களும் கலந்துக்கொண்டன.  காவல் துறையால் அனுமதிக்கப்பட்ட சிலைகளை மட்டுமே இன்று கரைக்க முடியும். இதுபோன்ற பல்வேறு கட்டுபாடுகளுடன் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டன.

இன்று நடைபெற்ற ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்கவும், அப்படி ஏதாவது நடந்தால் அதனை தடுக்கவும் அதிரை ஏராளமான போலிஸ் வாகனங்களில் 500 க்கும் மேற்பட்ட போலிஸார்கள் அதிரடி படையினர் குவிக்கப்பட்டனர். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இறுதியாக இந்த ஊர்வலம் அதிரையில் எந்தவொரு பதற்றமும் இன்றி அமைதியாக நிறைவடைந்தது.

படங்கள்: முஹம்மது முஹைதீன்