காஞ்சிபுரத்தில் பள்ளிவாசலின் ஒரு பகுதி இடிப்பு! உண்மையும் பின்னனியும்!

11009955_897093180377873_3514504189380163529_n

நடந்தது என்ன? : -‘மறுப்பு அட்மின்’-ஜாகிர் ஹுசைன்.

காஞ்சிபுரத்தை அடுத்த ‘நசரத் பேட்டை’யில், வக்ப் வாரியத்தின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் பள்ளிவாசலை, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் நீக்கப்பட்ட ‘முன்னாள் முத்தவல்லி ஹயாத் பாஷா, 18-09-2015 அன்று, ‘ஜும்மா’ தொழுகைக்குப் பிறகு பள்ளிக்கு பூட்டு போடுகிறார்.

தகவல் அறிந்து, மறுப்பு பக்கத்தின் ‘அட்மின்’ ஜாகிர் ஹுசைன் ஆகிய நான், மற்றும் (திருவள்ளூர் பகுதிய சேர்ந்த) இக்பால் பாஷா என்ற சகோதரரும் நேற்று(19-09-2015), மதியம் 1 மணியளவில் பள்ளிவாசலின், வாசலில் நிற்கின்றோம்.

பள்ளிவாசலுக்கு பூட்டு போடப்பட்டு தொழுகை நிறுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்து கொண்டோம்.

நாங்கள் கண்ட அதிர்ச்சியான காட்சிகள் :
——————————————————-
பள்ளிவாசலுக்கு பூட்டு போட்டுவிட்டு, பூட்டப்பட்ட பள்ளிக்கு உள்ளே, சுமார் 10 நபர்கள் சுத்தியல் கடப்பாரை உள்ளிட்ட உபகரணங்களுடன் பள்ளிவாசல் காம்பவுண்டுக்குள் உள்ள ஒரு பகுதியை இடித்துக் கொண்டிருந்தனர். (அது, அரபி பாடசாலை(மதராசா) என்று பின்னர் தெரியவந்தது)

பூட்டு போடப்பட்டதோடு அல்லாமல், பள்ளிக்கு உள்ளே செல்லும் வழியை மறித்து ‘ஹயாத் பாஷா’ உள்ளிட்ட சிலர் நின்றுக் கொண்டு (1 மணி முதல் 2.30 மணிவரை) எங்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

2.30 மணியளவில் காஞ்சிபுரத்தை சேர்ந்த உள்ளூர் வாசிகள் 6 நபர்கள் பள்ளியின் அருகில் கூடுவிடுகின்றனர்.

நாங்கள் 8 பேராக இருந்தவரை வாசலை மறித்து நின்ற ஹயாத் பாஷா, உள்ளூர் பிரமுகர் ‘மீராசா’ உள்ளிட்ட மேலும் சிலர் அங்கு வந்தவுடன், அங்கிருந்து தானாகவே விலகி சென்றுவிட்டார்.

மீராசா உள்ளிட்ட உள்ளூர் பிரமுகர்கள் களத்துக்கு வந்தபின்னர் தான் பள்ளிவாசலுக்குள் பிரவேசிப்பது சாத்தியமானது.

கூட்டம் கூடுவதைப் பார்த்து பள்ளியை இடித்துக் கொண்டிருந்தவர்கள் சுவர் ஏறி குதித்து ஓடுவிடுகின்றனர்.

இடிப்பதற்கு தயார் நிலையிலிருந்த ‘ஜேசிபி’ இயந்திரத்தின் டிரைவரிடம், உள்ளூர் முஸ்லிம் பிரமுகர் ஒருவர் பேசியதையடுத்து,

நான் சாதாரண இடிபாடுகளை அகற்றுவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளேன், மசூதியை இடிக்கும் இந்த பாவ காரியத்தை நான் செய்யமாட்டேன் என சொல்லிவிட்டு, அங்கிருந்து ‘ஜேசிபி’ வண்டியை எடுத்து சென்று விட்டார்.

நாங்கள் 2 பேராக தன்னந்தனியாக பள்ளிக்கு செல்ல முடியாத நிலையிலும், இடிக்கப்படுவதை தடுக்க முடியாததாலும், பள்ளி இடிக்கப்படுவதாக ‘மறுப்பு’ பக்கத்தில் சுருக்கமாக பதிவிட்டேன்

(பதற்றம் மற்றும் என்ன செய்வதென்றே புரியாத சூழலில், முழு விளக்கம் கொடுக்காமல் பள்ளி இடிக்கப்பட்டு வருகின்ற செய்தியை மட்டும் பதிவிட்டு, மேல் விவரங்கள் பெற எனது மொபைல் நம்பரை அதில் கொடுத்திருந்தேன்)

முன்னதாக, இதுகுறித்த விரிவான செய்தியை (திருவள்ளூரை விட்டு கிளம்பும் முன்பாகவே) காலையில் 10 மணிக்கே பதிவிட்டிருந்தேன்.

1 மணிக்கு 2 நபராக இருந்த நாங்கள், 2.30 மணிக்கு 8 நபராக மாறியும் நீதிமன்ற உத்தரவை போன்ற 2 பிரதிகள் பள்ளிவாசலின், வாசலில் ஓட்டப்பட்டிருந்தபடியால் பள்ளிக்கு உள்ளே செல்ல உள்ளூர்வாசிகள் தயக்கம் காட்டினர்.

நாங்களோ, இது பள்ளிவாசல், இதில் தொழுகை நடத்த எந்த நீதிமன்றமும் தடை விதிக்க முடியாது, என்று எடுத்து சொல்லி, பள்ளியின் இரண்டு கதவுகளையும் அப்புறப்படுத்தி விட்டு, பள்ளிக்கு உள்ளே சென்றோம்.

8 நபர்கள், 25 நபர்களாக மாறிவிட்டனர், பலரும் ‘லுஹர்’ தொழுகை அவரவர் பகுதியில் தொழுவிட்டிருந்தபடியால், 8-10 நபர்கள் மட்டும், பள்ளி வளாகத்தில் தொழுதோம்.

பள்ளியை இடித்துக் கொண்டிருந்தவர்கள், மின் சப்ளை (மெயின்) துண்டித்து இருந்தனர் என்பதை எங்களால் யூகிக்க முடியவில்லை.

2 மணி நேரம் கடந்தது, மக்கள் கூட்டம் 100ஐ நெருங்கியபோது, மின் துண்டிப்பு சரி செய்யப்பட்டு ‘அசர்’ தொழுகைக்கான முயற்சியில் ஈடுபட்டோம்.

நேற்றைய தினம், காஞ்சிபுரத்தில், விநாயகர் ஊர்வலங்கள் நடந்துக் கொண்டிருந்ததால், 2 மணிக்கு தகவல் தெரிவித்தும், 5 மணியளவில் தான் காவல்துறையினர் களத்துக்கு வந்தனர்.

அதுவும் விநாயகர் ஊர்வல ஏற்பாடுகளில் பிசியாக உள்ள நாங்கள், தற்போது ஒன்றும் செய்ய இயலாது 2 நாட்களுக்கு பிறகு பேசுகிறோம் என சொல்லிவிட்டு சென்றனர்.

தற்போது, பள்ளிவாசல் செயல்பட சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது, இடித்தவர்கள் ஓட்டம் பிடித்து விட்ட நிலையில், முன்னாள் முத்தவல்லி ‘ஹயாத் பாஷா’வும் இடத்தை விட்டு நகர்ந்து விட்டபடியால், தற்போது பள்ளிக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றே சொல்லலாம்.

என்றாலும், கடந்த பல ஆண்டுகளாக நடந்து வரும் இப்பிரச்சினை சம்மந்தமாக RDO விசாரணை, காவல் நிலைய புகார்கள், உள்ளதும், மேற்படி விசாரணைகளில் நீக்கப்பட்ட முத்தவல்லி ஹயாத் பாஷாவுக்கு ஆதரவாக ‘பாஜக’ மாவட்ட பொறுப்பாளர்கள் (அதிகாரப்பூர்வமாக) சம்மந்தப்பட்டிருப்பதும் கவலை அளிக்கும் செய்தியாகும்.

எனவே, இதை ஒரு சாதாரண நிர்வாக பிரச்சினையாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது.

எக்காரணம் கொண்டும் பள்ளிவாசலுக்கு பூட்டு போடக்கூடாது, இனி ஒரு செங்கல்லுக்கும் சேதம் வரக்கூடாது, தாசில்தார் மற்றும் RDO விசாரணைகளில் பாஜக மாவட்ட பொறுப்பாளர்களும் இதில் சம்மந்தப்பட்டுள்ளதால், சமூக ஒற்றுமைக்கு குந்தகம் வந்து விடக் கூடாது.

எனவே, காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர், இதில் நேரடி கவனம் செலுத்தி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்.

இப்படிக்கு

ஜாஹிர் உசைன், அட்மின்

-மறுப்பு (முகநூல் பக்கம்)

Close