வாட்ஸ்அப் வாதிகளுக்கான அதிர்ச்சி செய்தி!

WhatsApp_logo-color-vertical.svgவாட்ஸ் அப்ல இருக்கீங்களா? என்று கேட்பது சாப்டீங்களா? என்று கேட்பது போல் இயல்பாக ஆகிவிட்ட நிலையில் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு கவலை அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணையதளத்தில் ஒரு புதிய திட்டவரைவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டவரைவின்படி வாட்ஸ் அப், ஆப்பிளின் ஐ-மெசேஜ் போன்ற சேவைகளை பயன்படுத்துபவர்கள் தங்கள் அனுப்பும் அனைத்து செய்திகளையும் (தனிப்பட்ட உரையாடல்கள் உட்பட) கண்டிப்பாக 90 நாட்களுக்கு சேமித்து வைப்பது கட்டாயமாகிறது. மேலும் அரசு கேட்கும்பட்சத்தில் அவற்றை வழங்குவதும் கட்டாயமாகிறது.

இதேபோல், சேவையை வழங்கும் நிறுவனங்களும் இந்தியாவிலேயே பயனாளர்களின் தகவல்களை சேமித்து வைக்கும் வசதிகளை ஏற்படுத்துவதும் கட்டாயம். இத்திட்டம் வரைவு நிலையில் மட்டுமே உள்ளது என்றாலும் இது வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு கவலை அளிக்கும் செய்தி என்பது மட்டும் உறுதி.

இந்த திட்டம் பற்றிய உங்கள் கருத்துக்களை akrishnan@deity.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

Close