அதிரையில் 24 மணி நேர மருத்துவமும், காற்றில் பறந்த வாக்குறுதிகளும்…!

12006146_438683469662537_1104034569898927353_nஅஸ்ஸலாமு அலைக்கும்

50000 ஆயிரம்பேருக்கு மேல் தஞ்சை மாவட்டத்தில் அதிகம் முஸ்லிம்கள் வாழும் ஊராகயும் , பல முக்கிய அரசியல் தலைவர்களின் வெற்றியை தீர்மாணிகபடும் அளவிற்கு மிக முக்கியதுவம் வாய்த்த ஊராக உள்ளது . தேர்தல் நேரத்தில் போட்டியிடும் ஓவ்வொரு தலைவர்களுக்கும் நன்கு தெரியும் . அவ்வளவு முக்கியத்துவம் வாய்த்த இந்த ஊர் பல நிலைகளில் புறக்கணிக்கபட்டு உள்ளது . பத்து ஆண்டுகள் ஆகியும் ரயில்பாதை இன்னும் அமைக்கபடவில்லை , சரியான பஸ் நிலையம் இல்லை .24 மணிநேரமும் மருத்துவம் செய்யும் வசதிஇல்லை ,வாகன பெருக்கம் அதிகமாக உருவாகி விட்டதால் விபத்துக்களும் உயிர் இழப்புகளும் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது

.இப்படிப்பட்ட இந்த நேரத்தில் 24 மணி நேர மருத்துவ சேவை மிக மிக அவசியமும் முக்கியதுவம் தேவையும் உள்ளதாக உள்ளது . இதை உணர்த்த ஊர் மக்கள் அதிரை சேர்மன் தலைமையில் சாலை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது , ஊர்மக்கள் அனைவரும் திரண்டு வந்து தன் எதிர்ப்பை காட்டி எதிர்ப்பின் முக்கியத்துவதை உணர்த்தி அதிகாரிகள் ,அரசாங்க அதிகாரிகள் மட்டும் அரசியல் தலைவர்களுக்கு நம் நோக்கத்தையும் அதன் முக்கியதுவதையும் மக்கள் சக்தியை காட்டும் வகையில் மொத்த ஊர் மக்களும் சுற்றுப்புற கிராமமக்களும் கலந்து இப்படி ஒரு மறியல் போராட்டதை இது வரை நிகழ்த்து கிடையாது என அனைவரும் சொல்லும் அளவிற்கு ஊர் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து மருத்துவ சேவை தொடங்க அரசாங்க அதிகாரிகளிடம் அதிரை சேர்மன் தலைமையில் சொல்லி கிட்ட தட்ட மூன்று மாதங்கள் ஆகியும் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை ,

கருணை உள்ளதோடு பார்க்க வேண்டிய , செய்ய வேண்டிய இதை இழுத்து அடிப்பது துரதிஸ்டவசமாக உள்ளது ,மீண்டும் வீதிக்கு வந்து ஊர் மக்களும் சுற்றுப்புற கிராமமக்களும் கேட்க வேண்டுமா ? மீண்டும் கேட்கிறோம் இதற்குமேல் காலம் தாமதிக்காமல் உடன் இந்த 24 மணி நேர மருத்துவ சேவையை நடைமுறை படுத்தி தருமாறு அன்புடன் ஊர் மக்களாகிய நாங்கள் மீண்டும் ஒருமுறை கேட்கிறோம் ,

ஊர்மக்கள் உங்களை வானளாவிய அளவில் நிச்சயம் உங்களின் ஒத்துழைப்புக்கு வாழ்த்துவார்கள் .

அக்கம்: அதிரை ரிலே (முகநூல் பக்கம்)

Close