Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

FLASH NEWS: அதிரை அருகே சாலை விபத்து! இருவர் படுகாயம்!

12039641_907645469285315_8209915454024793295_nஅதிரை அருகே சாலை விபத்து!இருவர் காயம்!(படங்கள் இணைப்பு) அதிரை அருகே உள்ள ஏறிப்புரக்கரை சாலையில் இன்று இரவு ஆண்டிவயலை சேர்ந்த ஜேசுராஜ் மற்றும் மன்னார்குடியை சேர்ந்த செல்லப்பா ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் ஆண்டிவயலை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியில் சென்று கொண்டு இருந்த மாட்டு வண்டி மீது மோதினர்.இதில் ஜேசுராஜ் என்பவருக்கு காலில் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்ப்பட்டது.மேலும் அவருடன் சென்ற செல்லப்பா என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. உடனே அருகில் இருந்தோர் அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்தனர்.விபத்தில் காயம் அடைந்தவர்களை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தால் அந்த பகுதில் பரப்பரப்பாக காணப்பட்டது.மேலும் அதிரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.