முத்துப்பேட்டையில் இந்து சிறுவனின் இறுதி சடங்கை நடத்திய இஸ்லாமிய இளைஞர்

TamilDailyNews_2412792444230திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த சலவைத் தொழிலாளி முருகன்-சகுந்தலா தம்பதி மகன் கார்த்திக். 6ம் வகுப்பு படித்து வந்த இவருக்கு 15 நாட்களுக்கு  முன் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சேர்த்தபோது அவருக்கு மஞ்சள்காமாலை இருப்பது தெரியவந்தது. தீவிர சிகிச்சை பெற்றும் பலனின்றி  நேற்றுமுன்தினம் இறந்துவிட்டார்.

இறுதிச்சடங்கு நடந்தபோது, கார்த்திக்கின் குடும்ப நண்பரான அதே பகுதியை சேர்ந்த ஹாஜா என்பவர் பந்தல் போடுவதில்  ஆரம்பித்து அடக்கம் செய்வது வரை தானே முன்னின்று வேலைகளை செய்தார். உடலை புதைக்க இடுகாட்டில் தானே குழிவெட்டினார். உறவினர்களுடன் சேர்ந்து  இந்து முறைப்படி அவரே சடங்குகளையும் செய்தார். இந்து சிறுவனின் இறுதிச் சடங்குகளில் முஸ்லிம் இளைஞர் செய்த இந்த செயலை கண்டு பலரும் பாராட்டினர்.

Close