கும்பகோணத்தில் நடைபெற்ற INTER-JOURNAL அளவிலான கைப்பந்து போட்டியில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி வெற்றி!(படங்கள் இணைப்பு)

12017475_907718882611307_8123938241376767493_oகும்பகோணத்தில் இன்று INTER-JOURNAL அளவிலான கைப்பந்து போட்டி கும்பகோணம் அரசு கல்லூரியில் நடைபெற்றது.இந்த போட்டியில் 12 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.இதில் நமதூர் காதிர் முகைதீன் கல்லூரி பங்கு பெற்று இறுதி போட்டியில் வெற்றி பெற்று உள்ளது. பரபரப்பாக நடைபெற்று வந்த ஆட்டத்தில் நமதூர் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் பூம்புகார் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இதனையடுத்து களம் இறங்கிய நமதூர் காதிர் முகைதீன் கல்லூரி பூம்புகார் அணியை 25-15,25-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.வெற்றி பெற்ற நமதூர் காதிர் முகைதீன் கல்லூரி INTER-UNIVERSITY போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. மேலும் நமதூர் காதிர் முகைதீன் கல்லூரி கைப்பந்து அணியின் கேப்டனாக அதிரையின் நட்சத்திர கைப்பந்து வீரர் ஆசிப் நியமிக்கப்பட்டு உள்ளார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் , பேராசிரியர்கள்,விளையாட்டு துறை ஆசிரியர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Close