FLASH NEWS: அதிரை அருகே விபத்து! ஒருவர் படுகாயம்!

adirai acc

ராஜாமடத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் அதிரையிலிருந்து ராஜாமடத்திற்கு இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டுருந்தார். அப்போது எதிரே வந்த NANO கார் அவர் மீது மோதியது. இதனால் அவருக்கு முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அவரை ஆட்டோ மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர்.

அவருக்கு அதிரை அரசு மருத்துவமனையில் முதல்உதவி அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அல்லது தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Close