Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் வழக்கம் போல் பெருநாள் காலை மின்சாரம் தடை!

20140606_145255_20140626114749022

அதிரையில் கடந்த பல நாட்களாக மின்சாரம் தடையின்றி சீராக வழங்கப்பட்டு வருகிறது. இது மகிழ்ச்சியான செய்தி. ஆனால் நமதூரில் வாடிக்கையாகி விட்ட செய்தி என்னவெனில் பெருநாள் வந்துவிட்டால் பவர்கட். இப்பொழுதும் மின்சாரம் இல்லை. நேற்று இரவும் இரண்டு முறை தடை செய்தார்கள். பெருநாள் காலை நமக்கு எவ்வளவு மின்சார்ந்த தேவைகள் இருக்கும் என்று சொல்ல தேவையில்லை. இது குறித்து மின்வாரியத்திடம் கேட்டால் பொய்யான ஒரு காரணம் சொல்வது. இவர்களுக்கு எப்படி தான் பெருநாள் காலையில் மட்டும் இது போன்று சிக்கல் வருகிறது என தெரியவில்லை. அதிரை மின்வாரியத்தின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy