பசுமை அதிரை 2020 – ஹஜ்ஜு பெருநாள் ஸ்பெசல்

அஸ்ஸலாமு அலைக்கும் !

image

அதிரையில் பெருநாள் பரபரப்பு களைகட்டியிருக்கும் இந்த அற்புதமான சூழலில், நாமும் நமது எதிர்காலமும் எவ்வாறு இருக்க வேண்டும் ஆயிரம் கனவுகளோடு அவரவர்களுக்கு ஏற்ற வேண்டுதலை படைத்தவனிடம் வைக்காதவர்கள் இருக்கவே முடியாது – அல்ஹம்துலில்லாஹ் !

அதிரையின் பெரும்பாலன இணைய பயனர்களின் நேரங்கள், உள்ளூரில் இருப்பவர்களை விட வெளிநாட்டில் இருப்பவர்கள் இணைய வழியிலேயே செலவிடப்படுவது அனைவரும் அறிவோம் !

குறிப்பாக அதிரையில் தான் / அதிரை பெயரில் அதிகம் வலைப்பூக்கள்… அதுவும் மரங்களின்றி ஆர்வமிக்க மனங்களைக் கொண்டு விதைக்கப்பட்ட வலைப்பூக்கள் அதில் சில (அதிரை)மனம் வீசுகிறது மேலும் பல வலைப்பூக்கள் மனமா / மானமா சுழற்சியிலேயே மலர்ந்து இருக்கிறது !

சமீபத்தில் அதிரையின் பன்னெடுங்காலமாக இணையத்தோடு ஒன்றர கலந்துவிட்ட சமூக அக்கரை கொண்ட சகோதரர்களால், `கரை` மறந்த, கலகம் களைந்த, வேறுபாடுகளை வேரறுக்க உள்ளொன்றும் புறமொன்றும் இருக்காமல் மனதோடு மனம் திறந்து பேசிக் கொள்ள கட்டுக்கோப்பான அதுவும் கூரையோடு இருக்கும் வீட்டுக்குள் அமர்ந்து தயாபுள்ளையலுவோ என்ற ஒருங்கிணைப்பில் விவாதிக்க, பகிர்ந்து கொள்ள, ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள என்று முகநூல் குழுமம் உருவக்காப்பட்டு சிறப்புடன் 629 முகநூல் தனிநபர்களின் அடையாளத்துடன் இணைந்திருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ் !

கூடிப் பேசவும், குழப்பதில் கும்மாளமிடவும், கொளுத்திப் போடவும் என்ற தளமாக இல்லாமல் கூடினால் நன்மைக்காகவும், குழப்பமிருந்தால் தீர்வை எடுத்துரைக்கவும், கொளுந்து விட்டு எரிந்தால் எழுந்து ஓடாமல் எதிர் கொண்டு `அணைத்துக்` கொள்ளவும் இங்கே களம் கண்டவர்கள் உடன்படுபடுவார்கள் என்ற நன்பிக்கையில் ஒவ்வொரு அசைவும் இருப்பவர்களின் (பெரும்பாலான) இசைவுகளுடனே இருக்கும் இன்ஷா அல்லாஹ் !

இந்த அருமையான களம் முன்னெடுத்த முதல் முயற்சியாக அதிரை முழுவதும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற பணி !

அதற்கென ஆரம்ப முதலே விதையிட்ட எங்கள் மூத்த சகோதரர் இபுராஹிம் அன்சாரி காக்கா அவர்களின் எழுத்தும் எண்ணமும் துளிர்விட இந்த தயபுள்ளையலுவோ தளம் அமைத்து களம் கொடுத்திருக்கிறது.

அதற்கான இலட்சினையையும் இங்கே அறிமுகப் படுத்துவதில் பேரானந்தம் கொள்கிறோம் !

அதிரை பசுமை 2020 – இலட்சினைக்கான கரு ! [LOGO] ADIRAI என்ற ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்து மரங்களின் இலைகளின் அமைப்பு.
விரித்து வைக்கப்பட்ட விரல்கள் ஐந்தும் ஒன்றாக இல்லமால் அதன் தனித் தன்மையுடன் ஒரே கையில் விரிக்கப்பட்ட விரல்கள் கிளைகளாகவும்
மரத்தின் வேர் வேரூன்றி இருப்பது இன்னும் வர இருக்கும் 2020 வருடம் வரை இன்ஷா அல்லாஹ் !
அடியில் சாலை வடிவில் நீண்டிருக்கும் கோடு இன்னும் செல்ல வேண்டிய பாதை நீளமாக இருப்பதையும் அது 2020 வரை செல்ல இருப்பதையும் சொல்கிறது.
2020 என்று வருடத்தை இலக்காக வைத்திருப்பதன் எழுத்து நடப்படும் மரக்கன்றுகள் பின்னர் மரமென எழுந்து நிழல் தரும்போது அதன் நிழலில் நமெக்கன் நன்மகைகள் கொட்டிக் கிடக்கும் (இன்ஷா அல்லாஹ்)

அதிரையில் முதற்கட்டமாக ஹஜ் பெருநாளைத் தொடர்ந்து நடக்க இருக்கும் ஈத் மிலன் சந்திப்பில் இதற்கான அறிவிப்பும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கிறோம்…

இலட்சினை போன்றதொரு ஒவ்வொரு விரலும் கிளையாக பசுமை அதிரை கனவை விரிவடையச் செய்ய அனைவரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் இன்ஷா அல்லாஹ் !

பசுமை அதிரை 2020 வளர்க ! வளமிக்க அதிரையாக மிளிர்க ! சிறிய உடல் உழைப்பால் உடற்பயிற்சியென ஊக்கத்துடன் செயல்பட்டாலே வெற்றியைத் தொடும் இந்த திட்டம் !

அதிரைநிருபர் பதிப்பகம்
இலட்சினை வடிவமைப்பு : MSM(r)

Close