Adirai pirai
EID SPECIAL islam உள்ளூர் செய்திகள்

அதிரையில் சிறப்பாக நடைபெற்ற TNTJ வின் ஹஜ் பெருநாள் தொழுகை(படங்கள் இணைப்பு)

12038465_739074072869857_4576241681764642293_nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக ஹஜ் பெருநாள் திடல் தொழுகை ECR சாலை பிலால் நகர் பெட்ரேல் பங்க் எதிரில் உள்ள கிராணி ஈத்கா மைதானத்தில் இன்று 24-9-2015 காலை 7.30 மணிக்கு நடைபெற்றது.

தொழுகை முடிந்தவுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பேச்சாளர் மௌலவி.மக்தூம் அவர்கள் இப்ராஹீம் நபியின் தியாகம் பற்றி சொற்பொழிவு நிகழ்த்தினார்.

அதிரையில் வசிக்கும் அனைத்து பகுதியில் உள்ள பெரும்பாலான ஆண்கள், பெண்கள் பெரும்திரளாக திரண்டு தொழுகையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திடலில் பெண்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

தொலைதூரத்திலிருந்து வந்த பெரும்பாலானோர் தங்களின் வாகனத்தை சாலையில் நிறுத்தி இருந்ததால் தொழுகை முடியும் வரை அப்பகுதியில் வாகன நெருக்கடி இருந்தது.

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy