Adirai pirai
islam posts

அதிரையில் ADT வழங்கும் தொடர் தாவா பயிற்சி!

கடந்த இரு வாரங்களாக அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாட்டில், அதிரை பிலால் நகரில் அமைந்துள்ள தர்பியா மையத்தில் சென்னை மஸ்ஜிதுல் முஃமீன் தாவா குழுவைச் சேர்ந்த சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் ‘தாவா ஏன்? எப்படி? என்ற தலைப்பிலும், சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள் ‘தாவா செய்ய நம்மை நாமே தயார் செய்து கொள்வது எவ்வாறு? என்ற தலைப்பிலும் இளைஞர்கள் மற்றும் தாவா ஆர்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக, வரும் வெள்ளிக்கிழமை 05.06.2015 அன்றும் மஃரிப் தொழுகையை தொடர்ந்து சகோதரர் அப்துல் ஹமீது அவர்களின் பயிற்சி வகுப்புக்கள் தொடரவுள்ளன. இந்த பயிற்சி களத்திற்கு வரும் சகோதரர்கள் மறவாமல் தங்களுடன் தமிழாக்க குர்ஆன் பிரதி ஒன்றையும் குறிப்பெடுக்க ஏதுவாக நோட்டு புத்தகம் ஒன்றையும் தங்களுடன் எடுத்து வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

கடந்த வாரத்தை போன்றே வரும் வெள்ளிக்கிழமை 05.06.2015 அன்றும் கீழ்க்காணும் வகையில் ஏகத்துவ அழைப்பாளர் அப்துல் ஹமீது அவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

1.    ALM ஸ்கூல் ஜூம்ஆ உரை
2.    பிலால் நகரில் அஸருக்குப் பின் பெண்களுக்கான பயான்
3.    மஃரிப் தொழுகைக்குப் பின் பிலால் நகரில் ‘தஃவா பயிற்சி வகுப்பு’

கடந்த வாரம் நிகழ்ந்த தாவா பயிற்சி வகுப்பின் புகைப்படங்கள்

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy