கவிதை போட்டியில் அதிரை கவியன்பன் கலாம் அவர்களுக்கு இரண்டாம் பரிசு

10356217_736012236440441_4230673256945557829_nகத்தர் என்னும் ஓர் அரபு நாட்டில் வாழும் முகநூல் நண்பர்கள் நடத்திய கவிதைப் போட்டியில் என் கவிதைக்கு இரண்டாம் பரிசில் கிட்டிய மகிழ்வை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கின்றேன்;

துள்ளி உலாவரும் சுந்தரக் கால்களில்
வெள்ளிக் கொலுசுதரும் மெய்சிலிர்க்கு மோசைதான்
அள்ளி யுனைநான் அணைக்க விளிக்குதே
கள்ள மிலாப்பிள்ளை காண்.

கொலுசுதரும் சப்தம் கொலுபோல் குழந்தை
குலுக்கிவரும் பாரென்று கூறும்- இலக்கியம்
சொல்லுகின்ற தேரொன்றுச் சோர்வின்றி யோசையுடன்
மெல்லவரு மென்று விளம்பு

12019862_972823709425958_4534750525597710238_n

-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

அதிரை பிறையின் மூத்த பதிவராக உள்ள அதிரை கலாம் அவர்களுக்கு அதிரை பிறை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் குழுவின் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Close