மக்கா விபத்தில் மயிலாடுதுரை ஹாஜி ஷஹீத் ஆனார்! மொத்தம் 717 ஹாஜிகள் மரணம்!

mecca_new_2சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா அருகே மினாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை  717 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணமாக சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் குவிந்துள்ளனர்.

ஹஜ் பயணத்தின் முக்கிய நிகழ்வான சாதான் மீது கல்லெறியும் நிகழ்ச்சி மெக்கா அருகே உள்ள மினாவில் நடைபெற்றது.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 717 பேர் உயிரிழந்தனர். 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக சவுதி அரசு தெரிவித்துள்ளது.

இந்தியர் பலி:

இந்த புனித பயணத்திற்கு 1.5 லட்சம் இந்தியர்களும் சென்றிருந்தனர். இதில் ஐதராபாத்தை சேர்ந்த பிபிஜான் என்பவரும், மயிலாடுதுறை அடுத்த வடகரையை சேர்ந்த சம்சுதீன் முகமது  என்பவரும் உயிரிழந்துள்ளனர்.

இதே போல், கேரளத்தை சேர்ந்த முகமது என்பவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் மெக்கா பெரிய மசூதியில் நடந்த கிரேன் விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக பலியாயினர். இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி மீண்டும் பலர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதவி எண்:

கூட்டநெரிசலில் சிக்கியுள்ளோர் பற்றி தகவல் அறிய உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
00966125458000, 00966125496000 என்ற இந்திய தூதரகத்தின் எண்ணை தொடர்புக்கொண்டு தகவல் அறியலாம்.

இரங்கல்:

மெக்கா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நன்றி: நியூஸ்7

Close