மினா கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு ஹாஜி ஷஹீத்

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா அருகே மினாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை  725 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணமாக சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் குவிந்துள்ளனர்.

ஹஜ் பயணத்தின் முக்கிய நிகழ்வான சைத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சி மக்கா அருகே உள்ள மினாவில் நடைபெற்றது.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 725 பேர் உயிரிழந்தனர். 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக சவுதி அரசு தெரிவித்துள்ளது.

இதில் மேலும் ஒரு தமிழக ஹாஜி ஷஹீதாகியுள்ளார். இதற்க்கு முன் மயிலாடுதுறை அடுத்த வடகரையை சேர்ந்த சம்சுதீன் முகமது ஷஹீதானார். தற்போது தமிழகத்தை சேர்ந்த முஹைதீன் பிச்சை என்ற ஹாஜியும் ஷஹீதாகியுள்ளதாகவும் மொத்தம் 14 இந்திய ஹாஜிக்கள் வஃபாதாகியுள்ளதாகவும் 13 ஹாஜிகள் காயமடைந்துள்ளதாகவும் சவூதியில் உள்ள இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

செய்தி: அதிரை பிறை

12006364_10153730042437125_4336574901805831761_n (1)

11201116_10153730042432125_1240402419554224013_n

Close