அதிரை ஆலடித் தெரு முஹைதீன் ஜும்மாவில் ஷஹீதான ஹாஜிகளுக்காக ஜனாஸா தொழுகை!

20150116_134526ஹஜ் பயணத்தின் முக்கிய நிகழ்வான சைத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சி மக்கா அருகே உள்ள மினாவில் நடைபெற்றது.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 725 பேர் உயிரிழந்தனர். 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் சென்ற 2 வாரம் முன்பு கிரேன் கீழே விழுந்து 100 க்கும் அதிகமான ஹாஜிகள் ஷஹீதானார்கள். இவர்களுக்கான ஜனாசா தொழுகை அதிரை ஆலடித்தெரு முஹைதீன் ஜும்மா பள்ளியில் ஜும்மா தொழுகைக்கு பிறகு நடத்தப்பட்டது. இதில் ஜும்மா தொழுகையில் கலந்துக்கொண்டவர்கள் பலர் இந்த தொழுகையில் கலந்துக்கொண்டு ஷஹீதான ஹாஜிகளுக்காக துஆ செய்தனர்.

 

Close