விடையறியா வினாக்கள்!

பொறுமை என்னும்
பொக்கிஷத்தைக் கைவிட்டதாலா?
மறுமைப் பயணம்
மக்காவில் அமைந்ததாலா?

விதியென்று சொல்வதா?
விரைவாய்ச் செல்ல
மதிசொன்ன தவறென்பதா?
மண்டைக்குள் வினாக் கணைகள்!
ஷைத்தானின் ஆயுதம்
சீரழிக்கும் “அவசரம்”
ஷைத்தானுக்குக் கல்லெறிந்தாலும்
ஷைத்தானின் அவசரத்தை விடவில்லை!
விடையறியா வினாக்களுடன்
விக்கித்து நிற்கின்றோம்
மடைதிறகும் கண்ணீரில்
மடல்களை வரைகின்றோம்!
சிறந்ததாம் சுவனமதில்
செழிப்புடன் இருக்கவே
இறந்தவர் ஹாஜிகளை
இறையவனே அருள்கவே!

 

-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

paper neww

Close