ஹஜ்ஜின் போது சைத்தானுக்கு கல் எறியும் நிகழ்வும், கும்பமேலாவும் ஒன்றா???

12006206_701343553335700_6492652630159995835_nதமிழச்சி முகநூல் பக்கத்துக்கு என் பதில்

இது மூட நம்பிக்கை இல்லை. கடவுள் நம்பிக்கை. என்னை படைத்து உலகில் சர்வ வசதிகளையும் வழங்கிய அல்லாஹ் என்ன கட்டளையிட்டுள்ளானோ அதனை நாங்கள் செய்கிறோம். இதனை மூட நம்பிக்கை என்று சொல்ல கூடாது. இறைவனின் கட்டளையை நிறைவேற்றிய அந்த நன்மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். பிறமத மூட நம்பிக்கைகளை பற்றி நான் பேச விரும்பவில்லை. ஏனெனில் அல்லாஹ் குர்ஆனில் “லக்கும் தீனும் வல்யதீன்” என்று கூறியுள்ளான். அஃதாவது உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு என கூறியுள்ளான். மேலும் பிற மத கடவுள்களை திட்டுவதையும் கண்டித்துள்ளான்.

இந்த அல்லாஹ்வாகிய என் இறைவன் தான் இப்ராஹிம் என்ற நபியை இறக்கி அவருக்கு எண்ணிடங்கா சோதனைகளை கொடுத்தான். 90வயது வரை குழந்தை பாக்கியம் இல்லாத அவருக்கு 90வது வயதில் இஸ்மாயில் என்ற குழந்தையை வழங்கினான். பின்னர் இப்ராஹிம் அவர்களின் கணவில் தன் குழந்தை இஸ்மாயிலை பலியிட கூறினான். இப்ராஹிம் நபியும் அவருடைய மகன் இஸ்மாயிலும் இதற்க்கு ஒப்புக்கொண்டார்கள்.

அப்போது 13 வயது நிறம்பிய இஸ்மாயிலிடம் சைத்தான் தவறான எண்ணங்களை மனதில் போட்டு மனதை மாற்ற நினைத்தான். இதனை அடுத்து இஸ்மாயில் சைத்தான் மீது போ என்று சொல்லி கல் எறிந்தார். (இதனால் தான் ஹாஜிகள் கல் எறிகின்றனர்). இதனை அடுத்து அல்லாஹ் இஸ்மாயில் அவர்களை அறுக்க வேண்டாம் எனவும் ஒரு ஆட்டை பலியிடவும் கூறினான். இதன் மூலம் இஸ்லாம் நரபலியை தடுத்துள்ளது.

ஆனால் பிற மத கிரியைகளில் நரபலி இன்னும் உள்ளன. தன்னை படைத்த இறைவனாகிய அல்லாஹ்வுக்காக தன் ஆருயிரை மகனை பலியிட முயன்ற இப்ராஹிம் நபி மற்றும் இஸ்மாயில் நபி அவர்களின் தியாகங்களை நாம் நினைக்கவே ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

இது குறித்த தெளிவான விளக்கங்கள் குர்ஆனில் உள்ளன. இதனை மூடநம்பிக்க்கை என்று கூறுவது முற்றிலும் தவறு.

-ஆசிரியர்: அதிரை பிறை
-Member of Tamilnadu Journalists Union

Close