Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரையில் மிகச்சிறப்பாக துவங்கிய மாபெரும் கிராஅத் போட்டி

அதிரை அல்-மகாதிப் நடத்தும் மூன்றாம் ஆண்டு மாபெரும் கிராத் மற்றும் பாங்கு போட்டி இன்று காலை சிறப்பாக துவங்கியது. முதல் கட்டமாக கிராஅத் போட்டி நடைபெற்றது. இதில் 40 மாணவர்கள் கலந்துக்கொண்டு தங்கள் இளமையான இனிமையான குரலில் அல்-குர்ஆன் வசனங்கள் ஓதினர். இதனை இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மக்கள் ஆவலாக கேட்டனர். இதனை தொடர்ந்து அஸர் தொழுகைக்கு பிறகு இந்நிகழ்ச்சி தொடரும். இதன் நேரடி ஒலிபரப்பை அதிரை பிறையில் கேட்கலாம்.

12049303_887356621334717_383442002840051307_n