அதிரையில் நிலத்தடி நீரை அதிகரிக்க அருமையான யோசனை!

Droplets-Waterஊரில் எந்த தெருக்களில் எல்லாம் குளம் உள்ளதோ அங்கெல்லாம் வருடத்தின் அதிகப்பச்ச நாள்கள் நீர் இல்லாமல் வறட்சியான நிலையில் உள்ளதையும் ,75 அடியில் இருந்து 200 அடி வரை ஆழத்தில் நிலத்தடி போர் போட்டவர்கள் வீட்டில் போரில் தண்ணீர் வருவது இல்லை என்ற நிலை புகார் தெருவிற்கு தெரு ,வீட்டிற்கு வீடு இருந்து வருகின்றது.இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் மட்டும் அல்ல சரி செய்யப்பட வேண்டிய விஷயமும் கூட, ( the right time take the right decisions ) சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்து செயல்பட்டால் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படலாம் என்பது பெரியோர்களின் வாக்கு .இந்த அவலநிலையை போக்க ,போர்களிலும் ,குளங்கலிலும் தொடர்ச்சியாக நீர் கிடைக்க நாம் உடன் செய்ய வேண்டியவை.

போர்களிலும் ,குளங்களிலும் தொடர்ச்சியாக நீர் கிடைக்க நாம் உடன் செய்ய வேண்டியவை
————————-
ஊரில் எங்கெல்லாம் குளம் உள்ளதோ இந்த குளத்தின் ஒரு கரையோரத்தில் 600 அடி 700 அடிக்கு ராச்சஷ போர்களை அமைத்தால் பூமியின் ஆழமான இடத்தில் உள்ள நீரை மேலே கொண்டு வந்து குளத்தை நிரப்பலாம் ,குளம் நிரம்பினால் நீர் பூமியில் உள்வாங்கி பூமியில் எங்கெல்லாம் நீர்கண் ஊற்று அடைபட்டு உள்ளதோ அங்கெல்லாம் நாளா திசையிலும் ஓடும், பரவலாக இதன் நீரோட்டம் போகும் பொழுது 75 அடியில் இருந்து 200 அடி அதற்கு கிலேயும் நீரோட்டம் தொடர்ச்சியாக இருக்கும் ,இப்படியான நீர் பரவல் ஏற்படுவதால் 75 அடியில் இருந்து 200 அடியில் அமைக்கப்பட்டு உள்ள நிலத்தடி போர் நீர் பெற்று இருப்பதால் இயங்க ஆரம்பிக்கும் ,மேலே வந்த நீர் மீண்டும் பூமியில் உள்வாங்கி ஆழ் நிலைக்குப் போய் மீண்டும் ராச்சஷ போர்களால் மேலிருந்து கீழுமாக சுழற்சி முறையில் இயக்கப்படும்போது போது குளத்திலும் ,போர்களிலும் தொடர்ந்து நீர்இருக்கும் ,நீர் கிடைக்கும்
இத்திட்டத்தை எப்படி செயல்படுத்துவது
=========================================
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் ஒவ்வொரு தெருவிலும் கணிசமான அளவில் உலகளாவிய அளவில் பரவலாக வேலைகளில் நாம் இருக்கிறோம் ,நம் பங்கு இத்திட்டம் செயல்படுத்த மிக மிக முக்கிய காரணியாக உள்ளது , அந்த அந்த தெருவில் உள்ள பணக்காரர்கள் ,தொழில் அதிபர்கள் மேலும் ஊரில் உள்ள செல்வந்தர்கள் ,இவர்களின் உதவியோடும் அரசாங்க உதவியையும் கேட்கலாம் ,திட்ட வரைவை உருவாக்கி மக்களின் ஒத்துழைப்போடும் உதவியோடும் தெரு கவுன்சிலர் ,அதிரை சேர்மன் இவர்களின் வழிகாட்டல் ஒத்துழைப்போடும் செய்யலாம் , ஊர் மக்களிடம் காணப்படும் மிக மிக அத்தியாவச பிரச்சினையை தீர்க்கலாம் ,
முக்கிய குறிப்புகள்
===================
ஆறு ஏரிகளில் இருந்து ஊருக்கு , ஊரில் உள்ள அனைத்து குளங்களுக்கும் நீரை கொண்டு வரும் வழிதடங்களை ராச்சஷ பைப்புகளை பூமியில் புதைத்து ஊருக்குள் உள்ள ஒவ்வொரு குளத்திற்கும் கொண்டு வரும் பணியையும் தொடர் முயற்சியாக செய்து வர வேண்டும் இது விஷயத்தில் அதிரை சேர்மன் பாராட்டதக்க வகையில் சிறப்பாக செய்து வருகிறார் ,உங்களின் ஒத்துழைப்பும் ,உதவியும் இருந்தால் அவருக்கு இது போன்ற பணிகளை ஆர்வமாக ,செய்ய ஊக்கதையும் ,புத்துணர்ச்சியையும் ,புதுத்தெம்பும் வரும்.இது போன்ற பணிகளை செய்துமுடிக்க மக்களாகிய உங்கள் பங்கும் ,ஒத்துழைப்பும் ,பணஉதவிகளும் முக்கியம் , இது உங்களுக்காக மட்டும் அல்ல நாளைய உங்களின் சந்ததிக்கும் உதவியாக இருக்கும் .

நீர் விஷயத்தில் பன்முக பார்வை முக்கியம் ,அதற்கு ஏற்றார் போல செயல் திட்டங்களையும் விரிவுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

-அன்வர்தீன் M.A

Close