சவூதி மன்னர் அப்துல்லாஹ் உடல் நிலையில் முன்னேற்றம்!

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் அரசர் அப்துல்லாஹ் அவர்களின் உடல்நிலை முன்னேறியுள்ளதாக அரசவை தெரிவித்துள்ளது.

90 வயதான சாம்ராஜ்ஜியத்தின் அரசர் அப்துல்லாஹ் தலைநகர் ரியாத்திலுள்ள மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவ நகரில் சிகிச்சை பெற்று வந்தார்.

மன்னருக்கு பதிலாக அவரது பணிகளை இளவரசர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் கவனித்து வருகிறார்.

மன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலால் சவூதியின் பங்குச்சந்தையில் சிறு சரிவு (5%) ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Close