இது போல் அதிரை பள்ளிவாசல்களிலும் செய்யலாமே!!!

கோட்டார், இளங்கடை பாவா காஸிம் ஜூம் ஆ மசூதி மற்றும் மல்ஜிதுல் அன்வர் அருகே, ‘அழகிய முன்மாதிரி நன்மைகள் பெட்டகம்’ என்ற பெயரில் பெட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இடலாக்குடி விளையாட்டு மற்றும்  பொதுசேவை மையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த பெட்டியில் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் உபயோகம் இல்லாமல் ஒதுக்கி வைத்துள்ள ஆடைகளை போடலாம்.  சேமிக்கப்படும் ஆடைகள் நேர்மையான முறையில் ஏழைகளை சென்றடைய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

image

கடந்த 24ம் தேதி பக்ரீத் தொழுகைக்கு பின்னர் தலைமை இமாம் மவுலவி அல்ஹாஜ் பஸ்லுல்ஹக் மன்பஈ இதனை திறந்து வைத்துள்ளார். இதில் அப்பகுதி இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் இருக்கும் பயன்படுத்தப்படாத ஆடைகளை போட்டு வருகின்றனர். இந்த சேவை அந்த பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இதுபோல் அதிரை பள்ளிகளிலும் செய்தால் ஊரில் உள்ள ஏழை எளிய மக்கள் பயனடைவார்கள்.

Close