நெட் பேங்கிங் – ஓர் அறிமுகம் – II

masthead-rtgsneft

NEFT – சில முக்கிய தகவல்கள்
NEFT மூலம், வார நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பணம் அனுப்பலாம். 9.00/ 11.00/ 12.00/1.00 /3.00 /5.00 என்று வார நாட்களில் 6 சுற்றுக்களில் பணப்பரிமாற்றம் நடைபெறும். உதாரணத்துக்கு 1.05க்கு நாம் பணம் அனுப்பினால் அது 3 மணி சுற்றில் சேர்ந்து விடும். 5 மணிக்கு நாம் அனுப்பியவரின் கணக்கில் பணம் கிரெடிட் ஆகி விடும்.
சனிக்கிழமைகளில் 9.00 மணி 11.00 மணி, 12.00 மணி என்று 3 சுற்றுக்களில் பணபரிமாற்றம் நடைபெறும். உதாராணத்துக்கு 12.05 மணிக்கு நாம் பணம் அனுப்பினால், அது வங்கியின் அடுத்த வேலை நாளான திங்கள் அன்று 9 மணி சுற்றில் தான் வரும். 11 மணிக்கு நாம் அனுப்பியவரின் கணக்கில் பணம் கிரெடிட் ஆகிவிடும். இவை வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றத்துக்கு உட்பட்டதாகும்.
NEFT மூலம் குறைந்தபட்சத தொகையாக 1ரூபாய் முதல் அதிகபட்சமாக 2,00,௦௦௦ லட்சம் ரூபாய் வரை பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும். இவை வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றத்துக்கு உட்பட்டதாகும்.
NEFT மூலம் இந்தியாவில் உள்ள எல்லா ஊருக்கும் பணபரிமாற்றம் செய்ய முடியும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் NRE, NRO கணக்குகள் வைத்திருந்தால், அந்தந்த வங்கிகளின் விதிமுறைகளுக்கு ஏற்ப, இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு பணம் அனுப்ப முடியும்.
NEFT மூலம் அனுப்பபடுகின்ற பணத்தை பெறுபவர்களுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் பணத்தை அனுப்புபவருக்கு சேவை கட்டணமும், சேவை வரியும் உண்டு. இவை வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றத்துக்கு உட்பட்டதாகும்.
வங்கியில் Savings Account, Current Account, ODCC Account, NRE, NRO வைத்திருப்பவர்கள் NEFT மூலம் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்

RTGS (Real Time Gross Settlement)
RTGS என்பது Real Time Gross Settlement என்பதன் சுருக்கமாகும். அதாவது உடனடி பணபரிமாற்றம் என்று பொருள்படும்.
இதுவும் IFSCன் அடிப்படையில் தான் செயல்படுகிறது. ஆனால் இங்கு 2,00,௦௦௦ லட்சம் ரூபாய்க்கு அதிகமான தொகையை மட்டுமே பணபரிமாற்றம் செய்ய முடியும்.
பணத்தை அனுப்பிய 10-15 நிமிடங்களுக்குள், சேர வேண்டிய வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.
RTGS மூலம் வார நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், சனிக்கிழமைகளில் 9.00 மணி முதல் 12.30 மணி வரையும் பணம் அனுப்பலாம். RTGS குறைந்த பட்சமாக 2 லட்சம் ரூபாயும் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் அனுப்பலாம் . இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் அனைத்தும் இதன் மூலமே பணம் பரிவர்த்தனை செய்கின்றன.
RTGS மூலம் இந்தியாவில் உள்ள எல்லா ஊருக்கும் பணபரிமாற்றம் செய்ய முடியும். RTGS மூலம் பணத்தை பெறுபவருக்கு கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால், அனுப்புபவருக்கு சேவை கட்டணமும் சேவை வரியும் உண்டு.
வங்கியில் Savings Account, Current Account, ODCC Account வைத்திருப்பவர்கள் RTGS மூலம் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். NRE, NO கணக்குகள் வைத்திருப்பவர்கள் RTGS மூலம் பணப்பரிமாற்றம் செய்ய இயலாது.
NEFT- க்கும் RTGS-க்கும் உள்ள வேறுபாடுகள்

NEFT- மூலம் பணப்பரிமாற்றம் நடைபெற நேரம் ஆகும். RTGS ல் பணப்பரிமாற்றம் உடனுக்குடன் நடைபெறும்.
NEFT மூலம் நாடு விட்டு நாடு பணப்பரிமாற்றம் செய்ய முடியும். RTGS மூலம் அவ்வாறு செய்ய முடியாது.
NRE, NO வங்கிகணக்கு வைத்திருப்பவர்கள் NEFT மூலம் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்ய முடியும். RTGS மூலம் செய்ய இயலாது.
NEFT ல் குறைவான தொகைகள் பரிமாற்றம் செய்ய முடியும் ஆனால் RTGS ல் தொகையாக 2 லட்சத்துக்கும் அதிகமான தொகையை மட்டுமே பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.
NEFT ல் அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே பணப்பரிமாற்றம் செய்ய முடியும் .

Close