Adirai pirai
trade உள்ளூர் செய்திகள்

அதிரை சுற்று வட்டாரங்களில் பெரும் வரவேற்பை பெற்ற அதிரை இளைஞர்களின் Glitzall.com இணையதளம்

அதிரை இளைஞர்களால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துவங்கப்பட்டது Glitzall.com என்னும் e-Commerce இணையதளம். இந்த இணையளத்தின் சிறப்பம்சம் என்னவெனில் வெறும் விளம்பரமாக மட்டும் பதியாமல் அந்த விளம்பரம் பதியப்படும் நிறுவனத்தில் என்னென்னை சலுகைகள் (OFFERS) வழங்குகின்றனவோ அதனை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவதுடன் வாட்ஸ் அப்,பேஸ்புக் போன்ற சமுகவலைதளங்களிலும் பரப்பி விடுகின்றனர். இதனால் ஆஃபர்களை பார்த்த மக்கள் அந்த ஆஃபர்களுக்கு ஏற்றவாறு பொருட்களை வாங்க அந்தந்த கடைகளுக்கு நாடி செல்கின்றனர்.

இந்த சிறப்பு சேவையினால் அதிரை, பட்டுக்கோட்டையில் உள்ள பல தொழில் நிறுவனங்கள் இந்த இணையதளத்தில் தங்கள் விளம்பரங்களை பதிவிடுகின்றனர். இது நிறுவனத்தார்கள் மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கும் பயனுள்ளதாகவே உள்ளது.

படித்துவிட்டு வேலை கிடைக்கவில்லை என புலம்பி காலம் தள்ளும் இளைஞர்களுக்கு மத்தியில் படித்து விட்டு அந்த அறிவின் மூலம் இணையதளம் துவங்கி தன் சொந்த காலில் நிற்கும் இந்த இளைஞர்களுக்கு அதிரை பிறையின் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதோடு உங்கள் வருமானம் ஹலாலான முறையில் அமையவும் Amazon, flipkart, EBay போன்று உலக புகழ் பெற்ற e-commerce  இணையதளங்களை போல் வளர வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிப்பு: அதிரை இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் அதிரை பிறையில் இப்பதிவு பதியப்படுகிறது. இதில் ஏற்படும் நிறை குறைகளுக்கு அதிரை பிறை எந்தவகையிலும் பொருப்பாகாது.

image