பேஸ்புக்கில் அதிரையர்களை ஒன்றிணைக்கும் “அதிரை தாயபுள்ளையலுவோ” குழுமம்

image

முகநூல், இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து தரப்பு மக்களின் அத்தியாவசியமாகிவிட்டது என்றே சொல்லலாம். இதில் பல்வேறு ஆபத்துகள், தீமைகள் இருந்தாலும் பலதரப்பட்ட தகவல்களை அறிந்துக்கொள்வதற்க்கும், தங்கள் திறமையை வெளிகொணர்வதற்க்கும் முக்கிய அம்சமாக இந்த முகநூல் உள்ளது.

இப்படிப்பட்ட முகநூலில் பெருவாரியான அதிரையர்கள் அங்கம் வகிக்கின்றனர். முகநூலில் அதிரையர்களின் கணக்குகள் எண்ணிலடங்காதவை. அதுபோல் அதிரையர்களை ஒன்றினைக்கும் குழுக்களுக்கும் முகநூலில் பஞ்சமில்லை. ஒவ்வொரு இயக்கத்துக்கும், தெருவிற்க்கும், விளையாட்டு அணிக்கும் குழுக்கள் உள்ளன. இந்த குழுக்கள் துவக்கத்தில் சீறிப்பாய்ந்தாலும் பின்னர் ஓய்ந்து அதிரை இணையதளங்களின் செய்தி பரப்பும் குழுக்களாக மாறி விடுகின்றன.

ஆனால் அது போல் இல்லாமல் கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் “அதிரை தாயபுள்ளையளுவோ” என்றதொரு முகநூல் குழுமம் அதற்க்கென்று சில நோக்கங்களையும், விதிகளையும், பொறுப்புதாரிகளையும் கொண்டு துவங்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக இக்குழுவை துவக்கிய சகோதரர் ஜமாலுத்தீன் நூர் முகம்மது. இக்குழுவில் தன்னுடைய அறிமுக பதிவில் கூறியிருப்பதாவது…

இந்த ஃபேஸ்புக் குழுமத்தின் நோக்கம் என்னவென்றால், ஊரில் நாம் எப்படி ஒருவரையொருவர் நேரில் சந்தித்தால் அன்யோன்யமாகவும், வயதுக்கேற்ற மரியாதையுடனும், அதிரைக்கே உரிய நகைச்சுவை, சிலேடை, குசும்புடனும் பேசுவோமோ அதேபோல் இயல்புடைய அதிரையர்களை ஒன்று சேர்க்கும் நோக்கத்தில்தான் இந்த குழுமத்தை தொடங்கியுள்ளேன். (Closed Group)

அதிரையர்கள் மட்டுமே கருத்திடும்படி இந்தக் குழுமம் செயல்பட, உங்களது தொடர்பிலுள்ள அதிரையர்களை இணைக்கவும்.

இயக்கம்,முஹல்லா,தெரு பாகுபாடுகள் இல்லாமல் சுமூகமாக கொண்டுசெல்ல அனைவரது ஒத்துழைப்பும் தேவை.”

இக்குழு துவங்கிய நாளில் இருந்து ஊரில் பல்வேறு முக்கிய தேவைகள், பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டும் உறுப்பினர்களால் பதியப்பட்டும் வருகிறது. இதனால் இக்குழு துவங்கப்பட்ட சிறிது காலத்துக்கு முகநூலில் உள்ள அதிரையர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்ப்பைப் பெற்றுள்ளது.

தற்போதைய நிலவரப்படி இக்குழுவில் 660 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். இதில் எழுதாளர்கள், இணைதள ஆசிரியர்கள், சமுக ஆர்வலர்கள், வெளிநாடு வாழ் அதிரையர்கள், உள்ளூர் தொழில் முனைவோர், இளைஞர்கள் என பல தரப்பட்ட அதிரையர்கள் அடங்குவர்.

இக்குழு அதிரையில் முன்னேற்றப் பாதையில் நீங்கா பங்கு வகிக்க அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

-நூருல் இப்னு ஜஹபர் அலி (ஆசிரியர்- அதிரை பிறை)

Close