அதிரையில் குப்பை மேடாக மாறிவரும் ஆணை விழுந்தான் குளம்!(படங்கள் இணைப்பு)

அதிரை சேர்மன் வாடி அருகே அமைந்து உள்ள ஆணை விழுந்தான் குளம் (யானையாம்  குளம்) அதிரையின்  மைய பகுதியில்  உள்ள இந்த  குளம் நமதூர் மக்களுக்கு பல ஆண்டு காலமாக நீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது .தற்போது சில வருடங்களாக தண்ணீர் இல்லாமல் வரண்டு கிடந்தது .தற்போது அதிரையில் பெய்த மழை காரணமாக தற்போது தண்ணீர் உடன் காட்சியளிக்கிறது.

ஆனால் இந்த குளம் முழுக்க குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது .     இந்த குளம் சுகாதார சீர்கேடு ஏற்படும் அளவுக்கு  குப்பைகள் நிரம்பி காணப்படுகிறது .தற்போது சொல்ல போனால் இந்த குளம் குப்பை தொட்டியாக மாறிவிட்டது எனலாம் .அதிரையில் உள்ள சில கோழிக் கடை கழிவுகளை இங்கு தான் கொட்டுகிறார்கள் . மேலும் இந்த குளம் அருகில் அரசு மருத்துவமனை ,தற்போது குழந்தைகளுக்கான சிறிய பள்ளி கூடம் ஒன்று ஆரம்பிக்கபட்டு உள்ளது.இந்த பகுதியில் செல்ல கூடியவர்கள் முகத்தை சுளித்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது .

அண்மை காலமாக இக்குளம் சரிவர பராமரிப்பு இல்லாத காரணத்தினாலும் ஆள் நடமாட்டம் குறைந்து காணப்படுவதாலும் இரவு நேரத்தில் சரிவர மின் விளக்கு இல்லாத காரணத்தினாலும் இந்த குளம்  குற்ற செயல்களுக்கு உகந்த இடமாக உள்ளது .மேலும் இந்த குப்பைகளால் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது என அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர் . 

பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள்    உடனே இந்த குளத்தை சுத்தம் செய்யும்படி அதிரை பிறை சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் கேட்டு கொள்கிறோம் . 

செய்தி மற்றும் புகைப்படம் :
காலித் அஹ்மத் (அதிரை பிறை  நிருபர்)

Advertisement

Close