முத்துப்பேட்டையில் கார்கள் கண்ணாடி உடைப்பு!

தர்ஹாவில் நேற்று இரவு நடந்த தாக்குதலுக்கு பின்பு இரவு 2 மணிக்கு மேல்  கார்களின் கண்ணாடி உடைத்த சம்பவம் நடந்துள்ளது.

முத்துப்பேட்டை பிரிலியண்ட் ஸ்கூல் அருகே  ECR ரோடு சந்திப்பில் மனார் மோட்டார்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு தனியார் வாகனங்கள் பழுது பார்ப்பதற்க்கு அங்கு  வரும்.  அப்படி  வந்த  கார்களை  ரோட்டோரத்தில் நிறுத்தப்படுவது வழக்கம்.

அது போல் நின்ற வாகனங்களை மர்ம நபர்கள் தாக்கி கார் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். நிறுவனத்தில் வாசலில் எரிந்து கொண்டிருந்த பல்பையும் உடைத்துள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.  காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் காவல் துறை வாகனங்கள்  ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.

புகைப்படம் உதவி. சுனா இனா அவர்கள்

Advertisement

Close