ம.ம.க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி திடீர் நீக்கம்

image

மனித நேய மக்கள் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மனித நேய மக்கள் கட்சி,  அக்கட்சித் தலைவர் ரிபாயி தலைமையில், கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஜவாஹிருல்லா  , ஆம்பூர் தொகுதியில் அஸ்லாம் பாஷா   ஆகிய 2 பேர்  எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில்,  திமுக கூட்டணியில் சேர்ந்தது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், 2016 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நல கூட்டியக்கம் என்ற பெயரில் மதிமுக,  மனித நேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் , இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய 5 கட்சிகளும் ஒரு அணியை அமைத்து, மக்கள் நல பிரச்னைகளில் போராட்டங்கள் நடத்தின.

பின்னர் வைகோ, மக்கள் நல கூட்டியக்கம் அரசியல் கூட்டணி என்றும், அதிமுக,  திமுக கட்சிகளுடன் கூட்டு வைக்காது என்றும் அறிவித்தார். அவரின் இந்த முடிவை மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரான ஜவாஹிருல்லா ஏற்கவில்லை. அதிமுக அணியில் சேர வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்த ஜவாஹிருல்லா, 5 கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் ஜவாஹிருல்லாவின் முடிவுக்கு மமக கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி உள்பட சில நிர்வாகிகள், திருவாரூரில் நேற்று நடைபெற்ற 5 கட்சி கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் மனித நேய மக்கள் கட்சி 5 கட்சி கூட்டணியில் நீடிப்பதாக அறிவித்தனர்.

இதனால் கட்சி உடையும் நிலை ஏற்பட்டது. ரிபாயி தலைமையில் இன்று அவசர பொதுக்குழு கூட்டம் தாம்பரத்தில் கூட்டப்பட்டது. அதே போல் தமீமுன் அன்சாரி தலைமையில் போட்டி பொதுக்குழு எழும்பூரில் கூட்டப்படும் என்றும், இரு அணியினரும் தாங்கள் தான் உண்மையான பொதுக்குழுவை கூட்டியிருப்பதாகவும், தங்களுக்கே மெஜாரிட்டி நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதாகவும் அறிவித்தனர்.

இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோரின் சமாதான முயற்சிகளை தொடர்ந்து எழும்பூரில் இன்று காலை நடைபெறுவதாக இருந்த தமீமுன் அன்சாரி தலைமையிலான போட்டி பொதுக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், கட்சிக்குள் நிலவும் குழப்பம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.,  தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கடந்த சில மாதங்களாக மனிதநேய மக்கள் கட்சி எழுச்சி பெற்று வருகிறது. இந்த வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டு சிலர் செய்த சதிதான் இது. அந்த சூழ்ச்சி வலையில் எங்கள் சகோதரர்கள் சிலரும் விழுந்துள்ளார்கள்.

நாங்கள் கட்சியின் தலைவர் ரிபாயி தலைமையில் தாம்பரத்தில் இன்று எங்கள் பொதுக்குழுவை கூட்டி இருக்கிறோம். 95 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் எங்கள் வசம் இருக்கிறார்கள். அவர்கள் கூட்டும் கூட்டம் செல்லாது.

5 கட்சி கூட்டணி என்பது பொதுவான மக்கள் பிரச்னைகளை முன்னெடுத்து போராடுவதற்காக உருவாக்கப்பட்டது. அதை அரசியல் கூட்டணி என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே அந்த அணியில் இருந்து வெளியேறினோம்.

அதிமுக அணியில் நாங்கள் இருந்தபோது அந்தக்  கட்சியுடன் நல்ல ஒத்துழைப்பு இருந்தது. 4 கட்சி கூட்டணி எதையும் சாதிக்கப்போவதில்லை. பூத் ஏஜெண்டுகளை நியமிக்க கூட ஆள் கிடையாது. எங்கள் கட்சியில் பிளவு ஏற்படுத்த சூழ்ச்சி செய்தது யார் என்பது தெரியும். அதை இப்போது சொல்ல மாட்டேன். உரிய நேரத்தில் வெளியிடுவேன்” என்று கூறினார்.

தமீமுன் அன்சாரி நீக்கம்

இதனிடையே தாம்பரத்தில் நடைபெற்ற மனித நேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தமீமுன் அன்சாரி பொதுக்குழு கூட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

image

https://m.youtube.com/watch?v=PVPwlLO-Jow&feature=share

Close