முத்துப்பேட்டை தர்ஹா இடிப்பு! தொடரும் பதற்ற நிலை! (முழு விபரம், படங்கள் இணைப்பு)

முத்துபேட்டையில் 01-01-2015 இன்று 12.30 மணிக்கு 40 லிருந்து 50 கயவர்கள் தர்காவை தாக்கி சேதம் படித்தி மதில் சுவரை உடைத்து, அருகில் உள்ள கூறைவீடுகள் மற்றும் வேளிகளையும் சேதப்படுத்தி மின் விளக்கை உடைத்து இருந்தவர்களை தாக்கிள்ளனர். இதில் இருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளனர்.
நடந்த சம்பவத்தை S D P I கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக் நேரில் சென்று பார்வையிட்டார், தகவல் அறிந்து திருவாரூர் மாவட்ட SP நேரில் சென்று சம்பவத்தை ஆய்வு செய்தார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றவர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிகூறினார்.
உடன், SDPI கட்சி மாநில செயற்குழு உறுபினர் அபுபக்கர் சித்திக், தர்கா கமிட்டி SS. பாக்கர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன்,SDPI கட்சி வழக்கறிஞர் நிஜாம் முஹம்மது,பொது மக்கள் இருதனர்.

 நேரில் பார்வையிட மமக பொது செயலாளர் தமிமுன் அன்சாரி,மமக மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா,மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிகுளம் தாஜுதீன் ஆகியோர் இன்று மதியம் 3 மணியளவில் முத்துப்பேட்டைக்கு வருகை புரிந்தார்கள்.

மாலை குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க கோரி மேல்அதிகாரிகளை நேரில் சந்திக்க உள்ளார்கள்…..

புகைப்படம் KSH.சுல்தான் இப்ராஹிம் 

Advertisement

Close