22 அப்பாவி ஆப்கானிஸ்தான் நோயாளிகளை கொன்றது அமெரிக்கா

அமெரிக்காவின் கொடூர தாக்குதலில் ஆப்கான் மருத்துவமனை நோயாளிகள் 22 பேர் பலி ..
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்க ராணுவம் குன்தூஸ் மாகாணத்தின் என்ஹெச்எஸ் மருத்துவமனையில் நடத்திய கொடூரமான தாக்குதலில் அந்த மருத்துவமனயில் இருந்து சுமார் 22 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.. கொல்லப்பட்டவர்களில் 3 பேர் குழந்தைகள் ஆவார்கள்.. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.. அப்பாவி மக்களை கொன்றுள்ள இந்த கொடூரமான தாக்குதலுக்கு பெயர் என்ன ராணுவ நடவடிக்கையா ? அல்லது தீவிரவாத செயலா ??
வழக்கம் போல எந்த ஒரு கேடுகெட்ட ஊடகமும் இந்த உண்மையை வெளியிடவில்லை.. மாறாக கள்ள மவ்னத்தின் மூலம் இதை மறைத்துவிட்டனர்.. அமெரிக்காவின் கோரமான த்ரோன் தாக்குதலில் மட்டும் ஆப்கானில் கொள்ளப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை பல ஆயிரம்.. இதில் அதிகம் கொல்லப்பட்டது பெண்கள் மற்றும் குழந்தைகளே ஆவார்கள்.. மேலும் இரட்டை கோபுர தாக்குதல் என்ற பொய்யை கூறி அமெரிக்கா ஆப்கானை ஆக்கிரமித்ததில் இருந்து இன்றுவரை கொல்லப்பட்ட ஆப்கானியர்களின் எண்ணிக்கை பல லட்சம் என்பது வேதனையான உண்மை..
எது எப்படியோ எந்த ஒரு ஊடகனும் அமேரிக்கா இயற்கை வளங்களை கொள்ளையிட உலகில் அரங்கேற்றி வரும் தீவிரவாத செயல்களை பற்றிய உண்மைகளை கூறுவதே கிடையாது.. மாறாக இந்த உண்மைகளை மறைத்து மக்கள் மன்றத்தில் பொய்களின் மூலம் ஏமாற்றிவகின்றனர் என்பதே எதார்த்தமான உண்மை….

image

Close