தமீம் அன்சாரிக்கு என்றும் உறுதுணையாக இருப்போம்! சொந்த ஊரான தோப்புத்துறை மக்கள்!

image

தமீமுன் அன்சாரி எங்கள் ஊரைச் சேர்ந்த மதிப்புமிக்க சகோதரர் . அவரது குடும்பம் மரியாதைக்குரிய உறவுகளை கொண்டது .

அவர் பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே  பொது நல சேவைகளில் ஈடுபட்டு வருகிறார் . எங்கள் ஊரில் பலர் புரட்சிகரமான மாற்றங்களுக்கு அவர் முக்கிய காரணமாக இருந்து வருகிறார் .

எங்கள் ஊர் ஜமாத்தினரின் அன்புக்கும் பொது மக்களின் அன்புக்கும் உரியவர் .

அவரது கொள்கைகளின் மீது மாற்றுக்கருத்து கொண்டவர்கள்  கூட அவரது தனிப்பட்ட நேர்மைக்காகவும் , குணநலனுக்காகவும்  அவருடன் நட்பாக இருகிறார்கள் .

யாருக்காவது கல்வி வழிகாட்டல் , மருத்துவ உதவிகள் சட்ட உதவிகள் தேவைப்பட்டால் ,உரிமையோடு அவருடன் அணுகுவார்கள் .

எங்கள் ஊர் இந்து பொது மக்களும் அன்சாரி மீது பெரும் மதிப்பு வைத்திருக்கிறார்கள்.

அவரது குடும்பத்தினர் வசதியாக இருந்தும் அவர் வணிகத்தில் கவனம் செலுத்தாமல் 25 வருடமாக பொதுப்பணி ஆற்றிவருகிறார் .

21 வருடம் தமுமுகவுக்காகவும்  7 வருட மமக வுக்காகவும் அவர் உழைத்து வருகிறார் .

அவர் குடும்பத்தை பார்க்காமல் சம்பாதிக்காமல் அலைகிறாரே என நலம் விரும்பிகள் கண்டிப்பது உண்டு .

அவரது உறவினர்கள்  வெளிநாட்டுக்கு அழைத்தும் அவர் போகவில்லை .

ஊருக்கு வந்தால் பொதுச் செயலாளர் என்று இறுமாப்பில் திரியமாட்டார் . மாறாக இயல்பாக, சகஜமாக பழகுவார் .

அதுதான் தோப்புத்துறை மக்களின் ஒட்டுமொத்த அன்புக்கு பாத்திரமாக அவர் விளங்க காரணமாகும் .

சிறிய அளவில் ரியல் எஸ்டேட் , ஏற்றுமதி என கடந்த ஓரிரு வருடங்களாக  தான் அவர் கல்லூரி நண்பர்களுடன் இனைந்து வியாபாரம் செய்வதை அனைவரும் அறிவோம் .

அதில் கூட அவர் ஒழுங்காக கவனம் செலுத்தாமல் , ஊர் ஊராக கட்சி பணியாற்ற அலைவதை நாங்கள் பார்த்து வருகிறோம் .

இந்நிலையில் கட்சியில் ஏற்பட்ட  உள் முரண்பாடுகளுக்கு நியாயமான   காரணங்களை சொல்லாமல் , அவரது வளர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்ற பொறாமை உணர்வோடு அவர் நீக்கியது எங்கள் ஊரையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது .

அதைவிட கொடுமை தமீமுன் அன்சாரி திமுக விடம் பேரம் போய், ஏதோ பணம் வாங்கிவிட்டது போல ஜவாஹிருல்லாஹ் நான்காம் தர அரசியல் வாதி போல பேசியது அவரின் தரத்தை அம்பலபடுத்தியிருகிறது .

அன்சாரி வெளிநாடுகளுக்கு  வந்தால் ஊர்க்காரர்களிடம் கூட அன்பளிப்புகளை வாங்கமாட்டார் . பொருளாதார விஷயத்தில்  அவர் மிக மிக நேர்மையானவர் என்பதை TNTJ,SDPI கட்சிகளை சேர்ந்தவர்களே ஒப்புக்கொண்டு பாராட்டுவார்கள் .

  உண்மையான குற்றச்சாட்டுகளை திசை திருப்ப அபாண்ட பழிகளை போடும் ஜவஹிருல்லாஹ்வை தோப்புத்துறை பொது மக்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் .

கருத்து வேறுபாடுகளையும் , கட்சி வேறுபாடுகளையும் மறந்து நாங்கள்  எங்கள் ஊர் தமீமுன் அன்சாரிக்கு பின்னால் நீதிக்காக நிற்கிறோம்.

இப்படிக்கு

தோப்புத்துறை ஊர்

Close