இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்த இரண்டரை வயது சிறுமி ஆலியா

image

தமிழகத்தைச் சேர்ந்த இரண்டரை வயதான ஆலியா ஷாகுல் ஹமீது என்ற குழந்தை ஒரு நிமிட நேரத்தில் 35 வகையான ஜியாமெட்ரிகல் மற்றும் ஜியாமெட்ரிகல் அல்லாத வடிவங்களை சரியாக அடையாளம் கண்டு சாதனை படைத்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்சில் இடம் பிடித்துள்ளார்.

முக்கோணம், சதுரம், வட்டம், நீள் வட்டம் போன்ற ஜியாமெட்ரிகல் வடிவங்களை இந்தக் குழந்தை மிக சரியாக அடையாளம் காட்டி அசத்தியுள்ளார் ஆலியா.

செப்டம்பர் 28ம் தேதி ஹரியானா மாநிலம் பரீதாபத்தில் உள்ள இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அலுவலகத்தில் இச்சாதனையை குழந்தை நிகழ்த்திக் காட்டியது. குறைந்தபட்சம் 25 வடிவங்களை அடையாளம் காட்டலாம் என்ற நிலையில் இக்குழந்தை 35 வடிவங்களை அடையாளம் காட்டி சாதனை படைத்துள்ளது.

தற்போது அபுதாபியில் வசித்து வருகிறது ஆலியாவின் குடும்பம்.

Close