ஏமன் நாட்டில் நடந்த குண்டு வெடிப்பில் பட்டுக்கோட்டை வாலிபர் மரணம்

image

ஏமன் நாட்டில் நேற்று மதியம் நடைபெற்ற வெடி குண்டுவிபத்தில் சிக்கி உயிரிழந்த அந்தோனிராஜ் உடலை மீட்டுத்தர கோரி உறவினர்கள் முதல்வருக்கு கோரிக்கை.

பட்டுக்கோட்டை அருகே உள்ள சுக்கிரன்பட்டி கிராமத்தை சேர்ந்த சவரிமுத்து மகன் அந்தோனிராஜ்(25), கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துபாயில் உள்ள ஒரு கம்பெணியில் ஆசாரி வேலைக்கு சென்றார். அவருக்கு அடுத்தமாதம் திருமணம் செய்வதாய் முடிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் பணி நிமித்தமாக துபாய் கம்பெணி அவரை தென்னாப்பிரிக்காவில் ஏமன் நாட்டில் உள்ள ரானுவ தளத்திற்கு பணிக்கு அனுப்பினர்.

இந்நிலையில் நேற்று ஏமன் ரானுவ முகாம் மீது அல்கொய்தா தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கு பணியில் இருந்த அந்தோனிராஜ் பலியானார்.
இந்நிலையில் கிறிஸ்தவ முறைப்படி தனது மகனின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்க்காத தனது மகனின் முகத்தினை தன் குடும்பத்தினர் பார்க்க வழி செய்யும் வகையில் அவரது உடலை பெற்றுத்தரும்படி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Close