அதிரைக்கு, நேருவின் சட்டத்தை எதிர்த்து வெள்ளிக்கிழமை விடுமுறை பெற்றுத் தந்த ஹாஜி.SMS.ஷேக் ஜலாலுத்தீன் அவர்களின் தியாகம்

image

கடந்த 1950ல் அரசு விடுமுறை தினமாக நேரு ஞாயிற்றுக்கிழமை என்று அறிவித்தார்.

ஆனால் பிரிட்சிஸ் (ஆங்கிலேயர்) ஆட்சி காலத்தில் வாரவிடுமுறை வெள்ளிக்கிழமையாக
தான் இருந்தது.
இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 1950ஆம் ஆண்டு நேரு புதிய சட்டத்தை
அமல்படுத்தினார்.
பள்ளிகூடங்களுக்கு சுற்றறிக்கை மூலமாக இனி வார விடுமுறைகள் வெள்ளிக்கிழமை
கிடையாது ஞாயிற்றுக்கிழமைதான் என்று அறிவித்தார்.

இன்று பாரதம் முழுதும் இஸ்லாமியர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் வெள்ளிக் கிழமை விடுமுறை நாளாக அனுபவித்து வருகிறோம் என்றால், இந்திய தேசத்தின் தென் கோடியில் வாழ்ந்து மறைந்த, காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களை உருவாக்கிய நம் கல்வித் தந்தை மர்ஹூம் ஹாஜி SMS சேக் ஜலாலுதீன் அவர்களின் முயற்சியில் கிடைத்த மாபெரும் வெற்றியே.

1950 ஆம் ஆண்டு எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை நாளாக ஞாயிற்றுக் கிழமை என அரசு அறிவித்த போது, முஸ்லிம்களாகிய எங்களுக்கு வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகையே முக்கியமானது. எனவே வெள்ளிக் கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க கல்வித்துறையிடம் அனுமதி கேட்ட போது, இது அரசியல் சாசனம் சம்மந்தமானது என பதில் கிடைக்க, கல்வித்தந்தை மர்ஹூம் ஹாஜி SMS சேக் ஜலாலுதீன் அவர்கள் அன்றைய மாவட்ட நீதி மன்றம் திருவையாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். இந்த வழக்கை உயர் நீதி மன்றம் மட்டுமே முடிவு செய்யும் என ஆர்டர் கிடைத்ததும், உடன் உயர் நீதி மன்றத்தை அணுகி வெற்றி கண்டார்கள்.

இருப்பினும் அரசு கசட்டில் வெளியிட்டு அனுமதி கிடைத்த பின்னர் செயல் படுத்த முடியும் என உயர்நீதி மன்றம் தீர்ப்பு கொடுத்தது. இதனை அரசு கசட்டில் வெளியிட்ட போது, அப்போது எந்த மறுப்பும் எழவில்லை. எனவே முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் வெள்ளி கிழமை விடுமுறை நாளாக பயன் பெறலாம் என முடிவு கிடைத்தது.

இதை ஆதாரமாகக் கொண்டு, இந்தியாவின் அனைத்து முஸ்லிம் கல்வி நிறுவனங்களும் வெள்ளிக் கிழமை விடுமுறை தினமாக இன்றும் பயன் பெறுகிறார்கள்.

தகவல்: நூர் முஹம்மது

குறிப்பு: முன்பு இப்பதிவில் இந்த விடுமுறையைப் பெற்றுத் தந்தது காதிர் முஹைதீன் அப்பா என்று தவறுதலாக பதியப்பட்டது. இது SMS ஷேக் ஜலாலுத்தீன் அவர்களால் பெறப்பட்ட விடுமுறையாகும்.

Close