Adirai pirai
தமிழகம்

நாற்றம் எடுக்கும் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம்! ஒரு பயணியின் மனக்குமுறல்!!!

தஞ்சை மாவட்டம் , பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்துக்கு  நேற்று இரவு 9:30 மணியளவில்  பொது கழிப்பிடத்துக்கு  சென்றேன் அங்கே கழிப்பிடம் பெயர்பலகை மட்டும்தான்  இருக்கு  அழகாய், உள்ளே ஒரு  நிமிடம் நிர்க்கமுடியல எந்த  ஒரு கழிப்பறைக்கும்  கதவு  இல்லை ஐயோ இப்ப  நினைத்தாலும்  வாந்தி  வருகிறது, அரசியல்வாதிகள்,மற்றும்  பட்டுக்கோட்டை நகராட்சி   நிர்வாகம்  இருக்கா இல்லையா? ஒரு  நிர்வாகி  அதில்  சென்று கழிவறையை  பயன்படுத்திவிட்டு வரசொல்லுங்க  பார்ப்போம் வாக்கு  வாங்க  மட்டும் பல்லை  இழித்துகொண்டு  வரும்  நீங்கள் ஒரு  பேருந்து  நிலையத்தில்  கழுவரையைகூட மக்களுக்கு  ஒழுங்கா  கொடுக்க  முடியவில்லையே!!!!  அதிலும் அந்த  இடம்  தனியார் இருசக்கரவாகன  பாதுகாப்பகமா இருக்கு நான் அங்கு நிற்கையில் ஒருவர்  வேகமாக வண்டியில் பயங்கர  சத்தத்தோடு ஹாரன்  அடித்துகொண்டு வந்தார் பார்க்கையில்  அங்கு ஒரு இஸ்லாமிய சகோதரி தன்  சக உறவினரை கழிவறைக்கு அனுப்பிவிட்டு காத்திருந்தார் அவரை நோக்கி வண்டியை  செலுத்திவந்தார் அந்த  நபர், அப்போது  மணி இரவு 10 இருக்கும் அந்த  சகோதரி  பயந்து ஒதுங்கினார், உள்ளே  சென்ற அந்த  நபர் வாகன  பாதுகாப்பு ஊழியரை கெட்டவார்த்தைகளால் திட்டினார், அந்த விளக்கை  ஏன் இன்னும்  எரியவிட்டு இருக்க என்று  விளக்கை  அணைத்தார் அந்த இடம்  இருண்டது  அப்போதும்  அந்த  பெண்மணி அங்கு  நிற்கிறார், பிறகு ஒரு 100 கொடு  என்று  வாங்கி  கொண்டு சென்றுவிட்டார்   பொது கழிப்பிடம்  போறவழி    எங்கும் வாகனங்கள், நிர்வாகம் தலையிட்டு இதற்கு தக்க தீர்வு எடுக்குமா?  ஊடகங்கள் கண்டுகொள்ளுமா? நான் படம்பிடித்தேன் ஏன் படம்பிடிக்கிறீங்க என்று  கத்தினார் அந்த பாதுகாவலர், ஸ்டாண்டை படம்பிடிக்ககூடாது என்றார் , ஏன்  பிடிக்ககூடாது  என்றேன்  பிடிக்ககூடாது  என்றார், நான் கழிப்பிடத்தைதான்  பிடிக்கிறேன்  என்று படம்பிடித்து  வந்தேன்  மாற்றம்  வேண்டும்  என்பவர்கள்  பகிரலாம்)

image

image

image