பரிதாபமான பெங்காளிகள்(பங்களாதேஷ்)!


“தேஷி” அல்லது “Bபந்து பாய்” என அழைத்தாலே சந்தோசமாய் செவிசாய்த்து சொந்த பங்காளியைபோல் பழகும் பெங்காளிகள்(பங்களாதேஷ் நாட்டவர்கள்). வாயிலேயே பெயிண்ட் அடிப்பவர்கள். புரியலியா? சவூதியின் பல நகரங்களின் கடைவீதியின் சில குறிப்பிட்ட சாலை ஓரம்,சந்துகளில் பார்த்திருக்கலாம். இவர்கள் பான் போட்டு துப்பிய எச்சிலாலேயே அவ்விடங்களை காவி நிறத்திற்கு மாற்றியிருப்பார்கள். (கமிஸ்முசித் போன்ற இடங்களில் ஒரு கடைவீதியே காவி நிறத்தில் காட்சி அளிப்பதே இதற்கு சாட்சி) 309 என்ற மோசமான புகையிலை கலந்த பான் போடுதலும், தம்பாக் என்ற புகையிலையை சுண்ணாம்போடு கசக்கி உதட்டுக்குள் அதக்குவதும், சுருட்டி கட்டிய வேஷ்டியும் பெரும்பான்மையாக இவர்களின் அடையாளமாகி போனது.

இதற்கு மாற்றமாக சவூதி சாலைகளின் அழகுக்கும்.,சுத்தத்துக்கும் இவர்களின் பங்களிப்பே அதிகம் என்றால் அது மிகையாகாது. காரணம் பல்தியா(துப்புரவு பணி) வேலைகளிலும் பல கம்பெனிகளின் சுத்தம் செய்யும் வேலைகளிலும் இவர்களே நிறைந்து காணப்படுகின்றனர். கடுமையான மழை,வெயில்,குளிர்,பனி போன்ற காலங்களில் கூட இவர்கள் சாலைகளில் வேலை செய்யும் பரிதாபத்தை பார்க்கும் கல் நெஞ்சமும் கரையும். இதனாலே நல் மனம் கொண்ட அரபியர்கள் சாலையோரத்தில் சுத்தம் செய்யும் பெங்காளிகளுக்கு பணமும், சிலநேரத்தில் உணவு,குளிர்பானம் பொன்றவற்றை தர்மமாக கொடுப்பர். 

மிகக்கொடுமையான கடுமையான வேலையில் இருந்தாலும் இவர்களின் சம்பளமோ மிக மிக குறைவு இந்திய மதிப்பில் ₹4000 லிருந்து ₹6000 மட்டுமே. உழைக்கும் திறனும் வருமானத்தின் வழியும் அறிந்த பெரும்பான்மை பெங்காளிகள் கம்பெனி வேலை முடிந்தவுடன் பார்ட்டைம் வேலையாக கார் கழுவுதல், வீடுகளை சுத்தப்படுத்துதல், கடை,உணவகங்களில் பகுதிநேர வேலை, குளிர்பான கேன்.இரும்பு.பிளாஸ்டிக் மற்றும் மறுசுழற்சி பொருட்கள் போன்றவற்றை சேகரித்து விற்பது போன்ற இவ்வருமானத்தை நம்பியே வாழ்கிறார்கள். 

ஊரையே சுத்தப்பத்தினாலும் இவர்கள் இருக்குமிடத்தையும்,உடையும்,உடலும் பலர் சுத்தமாக வைத்துகொள்வதில்லை. அதனாலே அரபியர்கள், ஹவுஸ் டிரைவர் போன்ற வேலைகளுக்கு பெங்காளியை வைத்துக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இவர்களின் உணவின் ரசனை மஞ்சளானது. ஆம் உணவில் மஞ்சள் பொடியை அதிகம் சேர்த்துக்கொள்கின்றனர். எனவே தமிழர்களிடையே பெங்காளிகளை “மஞ்சள் பொடி” என அடைமொழியிட்டு குறிப்பிடுகின்றனர்.

சவூதியில் குற்றசெயல்புரிந்து சிறைச்சாலைகளில் இருக்கும் கிழக்காசிய நாட்டு கைதிகளில் பெங்காளிகளே முன்ணணியில் இருப்பதாலும், ஒரு கடைவீதியொன்றில் பெங்காளிகளை தவறாய் பேசிய ஓர் அரபியரை பல பெங்காளிகள் ஓன்று சேர்ந்து அடித்தே கொன்ற சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்டது அதனால் சவூதி அரசு பங்களாதேஷ் நாட்டிற்கு சிலமாதங்களுக்கு விசா கொடுப்பதை நிறுத்திவைத்தது. இதுபோன்ற சிலரை தவிர்த்துவிட்டு பார்த்தால் பெங்காளிகள் அன்பானவர்கள் மட்டுமல்ல உழைப்பாளிகள்.

ஆக்கம்: அதிரை உபயா (எ) உபயதுல்லாஹ்

Advertisement

Close