லண்டன் வாழ் அதிரையர்களின் மகத்தான உதவிகள்! மனதார வாழ்த்துகிறது அதிரை பிறை!

image

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தை சேர்ந்தவர் முஹம்மது கனி. இவருடைய மகன் முஹம்மது மனாஸ் (8). புற்று நோயால் பாதிப்படைந்த இச்சிறுவனுக்கு அதிரை தமுமுக சார்பாக நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து லண்டன் வாழ் த.மு.மு.க பிரமுகர் இம்தியாஸ் மூலம் 1.25 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது.

இந்த தொகையை அதிரை தமுமுக மருத்துவ சேவை அணி சார்பாக ராமநாதபுரம் சென்று வழங்கப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க வினர் பலர் கலந்துக்கொண்டனர்.

இது போல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முத்துப்பேட்டையில் இடுப்பில் கட்டியுடன் தவிக்கும் மாணவிக்கு நிதி உதவியை அதிரை தமுமுக வினர் மூலம் லண்டன் வாழ் அதிரையர்கள் வழங்கினர்.

இது போல் பல மருத்துவ உதவிகளை லண்டன் வாழ் அதிரையர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். இவர்களின் இந்த சேவையை அதிரை பிறை சார்பாக மனதார வாழ்த்துகிறோம்.

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close